(எம்.கே.வள்ளுவன்) ஜொகூர் பாரு,
தன் தாயார் சத்தம் போட்டதால் 8 வயது இந்திய சிறுமி 9 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மாண்டதாக தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நடைபெற்ற அச்சம்பவத்தில் தாமான் தம்போய் இண்டா 2, மாவார் 3 இல் உள்ள சொகுசு அடுக்கு மாடி வீட்டின் அறையொன்றிலிலுள்ள ஜன்னல் வழியாக கீழே குதித்து மாண்டவர் சங்கமித்ரா ஸ்ரீ தரன் என ஜொகூர் பாரு வட பகுதி மாவட்ட போலீஸ் தலைவர் மூத்த உதவிக் கமிஷனர் முகமட் தாயிப் அமாட் நேற்று தெரிவித்தார்.
சம்பவம் நடப்பதற்கு முன்னர் வீட்டில் எஸ்.சங்கமித்ரா தன் 11 வயதுடைய இரட்டைச் சகோதரர்களுடன் குறும்புத்தனத்துடன் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட அவர்களின் வளர்ப்புத் தந்தை சங்கமித்ராவை கண்டித்துள்ளார். தன் வளர்ப்புத் தந்தையின் கண்டிப்பை ஏற்க முடியாமல் அழுதவாறே தன் தாயாரிடம் சென்று சிறுமி கூறியிருக்கிறார்.
எனினும் தாயாரும் சங்கமித்ராவை கண்டித்ததால் சங்கமித்ரா படுக்கையறைக்கு சென்றதோடு அறைக்கதவை பூட்டிக் கொண்டார். அதன் பின் சிறுமி சங்கமித்ரா மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்பட்டது. சிறுமியின் தாயார் சங்கமித்ராவை அடித்ததாக கூறப்ப டுவதை நிராகரிக்காத முகமட் தாயிட் அமாட் எனினும் சிறுமியின் மரணத்தில் சூது ஏதும் நிகழவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
Read More: Malaysia nanban News Paper on 26.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்