கோலாலம்பூர்,
நேற்று 2017ஆம் ஆண்டின் யூபி எஸ்ஆர் முடிவுகள் தொடர்பான அறி விப்புகள் நாட்டில் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு தொடங்கப்பட்டதி லிருந்து வரலாறு காணாத அளவுக்குப் புதுமையையும் வியப்பையும் தந்திருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆண்டு வரைக்கும் ஒவ்வோர் ஆண்டும் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவுகள் பற்றிய அறிக்கையை தலைமைக் கல்வி இயக்குநர் உட்பட கல்வியமைச்சின் மூத்த அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டு வந்தனர். ஆனால் நேற்று வெளியான யூ.பி.எஸ்.ஆர். தேர்வு முடிவில் அப்படி ஓர் அறிக்கை வெளியிடப்படவில்லை.
அது மட்டுமல்ல, மாநில, மாவட்ட அளவில்கூட எந்த ஓர் அதிகாரியும் இதைப் பற்றி (யூ.பி.எஸ்.ஆர். முடிவுகள்) எதுவுமே சொல்லக்கூடாது என்று கடுமையான கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் யூ.பி.எஸ்.ஆர். தேர்வு அடைவுத்தாளை பார்க்கக் கூடாது; ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட (ரகசிய) கோப்பில் அந்த அடைவுத் தாளுடன் கல்வித்துறை சாராத வேறு 3 சான்றிதழ்களையும் இணைத்துக் கொடுத்து விட வேண்டும் என்றும் கட்டளையும் சுற்றறிக்கை மூலம் இடப்பட்டுள்ளது.
Read More: Malaysia nanban News paper on 24.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்