கோலாலம்பூர்,
நாட்டில் சாமானிய மக்கள் வாங்குவதற்குரிய வீடுகள் கட்டப்படாமல் அதிக விலையிலான மிதமிஞ்சிய ஆடம்பர வீடுகள் கட்டப்பட்டதற்கு வீடமைப் பாளர்களின் பேராசையே முக்கிய காரணமாகும். குறுகிய காலத்திலேயே அதிக லாபம் ஈட்டும் பொருட்டு சொகுசு வீடுகளை கட்டுவதில் அதீத ஆர்வம் காட்டியதால், அத்தகைய ஆடம்பர வீடுகளை சாமானிய மக்கள் வாங்க முடியாமல் போனது என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
மத்திய வங்கியான பேங்க் நெகாரா வெளியிட்ட அறிக்கையின்படி இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 690 வீடுகள் விற்க முடியாமல் மிதமிஞ்சிய நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் தலா வெ.250,000 க்கும் கூடுதலான மதிப்பாகும். கடந்த 2016 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 54,244 வீடுகள் அதாவது 36 விழுக்காடு வீடுகள் விற்க முடியாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து இருப்பது சொத்துடைமை சந்தையை வெகுவாக பாதித்துள்ளது.
விற்கப்படாமல் போன வீடுகளில் 61 விழுக்காடு, ஆடம்பர தன்மையிலான அடுக்குமாடி வீடுகளாகும். இதன் காரணமாகவே தலா 10 லட்சம் வெள்ளி மதிப்பிலான சொத்துடைமை திட்டங்களை நவம்பர் முதல் தேதியிலிருந்து அரசாங்கம் முடக்கியுள்ளது. மக்கள் வாங்க முடியாத வீடுகள் தொடர்ந்து கட்டப்பட்டுக்கொண்டு இருக்குமானால் வருகின்ற 2021 ஆம் ஆண்டு வாக்கில் மூன்றில் ஒரு வீடு அல்லது ஒரு கட்டடம் காலியாக கிடக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு போன்ற மாநிலங்களில்தான் அதிகமான ஆடம்பர வீடுகள் விற்க முடியாமல் இருக்கின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
Read More: Malaysia Nanban News Paper on 23.07.2011
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்