பெட்டாலிங்ஜெயா,
கோலாலம்பூரில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்தில் இரவு உணவு உட்கொள்ள சென்ற இரண்டு குடும்பத்தினர் மீன் தலை கறிக்கு பெரும் விலை விதிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் கடந்த வார இறுதியில் நிகழ்ந்தது. பணம் செலுத்தப்பட்டதற்கான ரசீதை அவர்க ளில் ஒருவர் சமூக ஊடகத்தில் நவம்பர் 20ஆம் தேதி திங்கட்கிழமை வெளியிட்டார். அவர் ஆர்டர் செய்த நான்கு தட்டு மீன் தலை கறிக்கு 600 வெள்ளி என அந்த ரசீதில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது.
ஒரு தட்டு மீன் தலை கறியின் விலை 150 வெள்ளி என இது அர்த்தமாகிறது. ஆர்டர் செய்யப் பட்ட இதர உணவு மற்றும் பான வகைகளின் விலை இந்த 600 வெள்ளியில் அடங்கவில்லை. இவை அனைத்திற்கும் அவர் செலுத்திய தொகை 1,000 வெள்ளி. இது மிக அதிக விலை என நான் கருதுகிறேன். அந்த உணவகத்திற்கு இனிமேல் போவதில்லை என நான் முடிவு செய்துவிட்டேன். நீங்கள் எல்லோரும் மிக கவனமுடன் இருங்கள் என்று அந்த ஊடகத்தில் குறிப்பிடப்பட்டிருந் தது. இந்த ஊடகச் செய்தி இப்போது வைரலாக பரவி வருகிறது.
Read More: Malasia nanban News Paper on 22.11.207
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்