கோலாலம்பூர்,
நம்பவே முடியவில்லை - ஒரு தற்கொலை சம்பவத்திற்கு பிறகு நம்மில் பெரும்பாலான வர்கள் கூறும் வார்த்தை இதுதான். என்னால் நம்பவே முடியவில்லை. பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருந்தார். எப்படி இப்படி ஒரு முடிவை எடுத்தார்? இறப்பு வீட்டில் பலரும் இப்படி கிசுகிசுப்பதை நாமும் கேட்டிருக்கலாம்.
மன உளைச்சல் காரணமாக ஒருவர் தற்கொலை செய்து கொள்வதை சாதாரணமான விஷயமாக நாம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஒரு குடும்பமே தற்கொலை என்றால் எங்கேயோ, ஏதோ நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அதை நாம் கண்டுபிடிக்க தவறி விட்டோம் என்றுதான் அர்த்தம்.கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி, ஜொகூர் பாரு, ஸ்கூடாய், முத்தியாரா ரீனாய் வீடமைப்புப் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் இறந்து கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டனர்.
குடும்பத் தலைவரான பூபாலன் ரத்தினம் (53) தனது இரட்டை மாடி வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார். அவரின் பிள்ளைகளான 14 வயது மகன் ஷர்வீன், ஒன்பது வயது மகள் கிரிஷா பிரிதீனா இருவரும் வீட்டின் பூஜை அறையில் உயிரற்ற உடலாய் கிடந்தனர். இருவரின் கழுத்திலும் நெறிக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டன.
பூபாலனின் நோய் வாய்ப்பட்டிருக்கும் மனைவி ஜெயா பிச்சைமுத்து (46) வரவேற்பறையில் உள்ள ஒரு படுக்கையில் இறந்து கிடந்தார். இவர் உடலில் எந்தவிதமான காயமும் தென்படவில்லை. இவர்களின் மரணத்திற்கு கடன் தொல்லையே காரணம் என்று போலீசார் கூறினர்.இதே போன்று மற்றொரு சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கெடா, சுங்கை பட்டாணியில் உள்ள பெர்டானா ஹைய்ட்ஸ் குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்தது. நாற்பத்தெட்டு (48) வயதே ஆன ஒரு வர்த்தகப் பிரமுகரான கே.சிவராவ் தனது வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கினார்.
இவரின் மூன்று பிள்ளைகளும் அதே படுக்கை அறையில் இறந்து கிடந்தனர். மகன்களான எஸ்.சஷ்வின் ராவ் (6), எஸ்.ரகுராம் ராவ் (5), மகள் எஸ்.யமுனா ஸ்ரீ (8) மூவரும் தலையணையால் மூச்சுத் திணற வைக்கப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சிவராவின் மனைவி வி.காமினி (39) சுமார் 21 தினங்களுக்கு முன்பு இதே அறையில்தான் தூக்கில் தொங்கி தற்கொலை புரிந்து கொண் டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மொத் தத்தில் இக்குடும்பத்தில் இருந்த ஐந்து பேரும் மாண்டுள்ளனர். இங்கும் கடன் தொல்லைதான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
Read More: Malaysia Nanban News Paper on 22.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்