ரவாங்,
தமிழ் பாலர் பள்ளிகளுக்கு பிள் ளைகளை அனுப்ப பெற்றோர்கள் முன்வர வேண்டும் என்று ரவாங் ஏசான் ஜெயா சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஷ் ராவ் நேற்று வலியுறுத்தினார். ரவாங் தமிழ்ப் பள்ளியில் பாலர் வகுப்புகள் நடத்துவதற்கு இடப் பற்றாக் குறை பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் இவ்வட்டாரத்தில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை வேறு பள்ளிகளில் சேர்த்தனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் ரவாங் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் தமிழ் பாலர் பள்ளிகளை சங்கம் தொடங்கியது.2015ஆம் ஆண்டு இப்பாலர் பள்ளியில் 25 மாணவர்கள் மட்டுமே கல்வி பயின்றனர்.
ஆனால் 2017ஆம் ஆண்டில் 55 மாணவர்கள் இப்பாலர் பள்ளியில் கல்வி பயின்றதுடன் அதில் 32 மாணவர்கள் அடுத்தாண்டு தமிழ்ப்பள்ளிக்கு செல்கின்றனர்.
இந்திய மாணவர்கள் தமிழ்ப் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் சங்கம் இம்முயற்சியில் இறங்கியது. இன்று 32 மாணவர்கள் தமிழ்ப் பள்ளிக்கு செல்வதுதான் எங்கள் முயற்சிக்கு கிடைத்த மகத்தான அங்கீகாரமாக நாங்கள் கருதுகி றோம் என்று அவர் கூறினார்.பிள்ளைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பெற்றோர்கள் மற்ற மொழி பாலர் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புகின்றனர்.
இதை தவறான சிந்தனை என்று நான் ஒரு போதும் சொல்வ தில்லை. ஆனால் தமிழ் பாலர் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்புவதால் மொழியுடன் சமயம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றையும் சேர்த்து அப்பிள் ளைகள் படித்துக் கொள்கின்றனர்.ஆகவே பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை தமிழ் பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று டத்தோ சுரேஷ் ராவ் கேட்டுக் கொண்டார்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்