( நா. மணிராஜா)
சுங்கைப்பட்டாணி,
இந்திய ஆடவர் தனது 3 பிள்ளைகளுடன் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் இந்த வட்டாரத்தை அதிர்ச்சியில் உறையவைத்தது. 48 வயதுடைய அந்த ஆடவரின் மனைவி கடந்த ஜனவரி மாதம் படுக்கையறையில் தூக்கில் தொங்கி உயிரைவிட்டதைத் தொடர்ந்து அடுத்த பத்து மாதங்களில் அக்குடும்பத்தில் மேலும் ஒரு துயர சம்பவம் நிகழ்ந்து இருப்பது, உறவினரை நிலைகுலையச் செய்துள்ளது.
அந்த நால்வரும் இங்கு பெர்டானா ஹைட்ஸில் உள்ள தங்கள் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது நேற்று பிற்பகலில் தெரியவந்தது. 48 வயதுடைய சிவராவ் த/பெ கிருஷ்ணன், அவரின் இரண்டு மகன்களான ரகுராவ் (வயது 6), சாஸ்மின்ராவ் (வயது 5), ஒரே மகளான யமுனா (வயது 8) ஆகியோரே இறந்தவர்களாவர் என்று போலீசார் அடையாளம் கூறினர். அந்த நால்வரும் வீட்டின் படுக்கை அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
அதே படுக்கை அறையில்தான் சிவராவின் துணைவியார் காமினி (வயது 38) இவ்வாண்டு ஜனவரி மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். சிவராவும் அவரின் மூன்று பிள்ளைகளும் இறந்து கிடப்பது பிற்பகல் 2 மணியளவில்தான் தெரியவந்தது. அவர்கள் 12 மணி நேரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று போலீசார் நம்புகின்றனர்.
Read More: Malaysia Nanban News paper on 21.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்