(ப.சந்திரசேகர்) ஈப்போ
குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா இங்குள்ள பிரபல தங்கும் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்ற முதல் வரிசை மாணவர்கள் பட்டம் பெற்றது பெருமை அளிக்கின்றது என்று பல்கலைக்கழக வாரிய குழுத் தலைவர் டத்தோஸ்ரீ விஜய் ஈஸ்வரன் கூறினார்.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேரா மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி காதிர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நற்சான்றிதழ்களை எடுத்து வழங்கி னார்.
ஈப்போவில் செயல்படும் குவெஸ்ட் அனைத்துலக பல்கலைக்கழகத்தில் மருத்துவம், மருத்துவம் சார்ந்த துறை, கணக்கியல், கணினி, தொழில் நுட்பம், சுற்றுலா போன்ற துறைகளில் பட்டக் கல்வி மேற்கொள்ளப்படுகிறது.
நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 14 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 199 மாணவர்கள் தங்களின் பட்டக் கல்விக்கான சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். தொடக்கத் தில் 98 மாணவர்களுடன் தொடங்கிய பட்டக் கல்வி இன்று 1,500 மாண வர்களை கொண்டு சிறப்பாக செயல்படுகிறது.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்