(ஹேமா எம். எஸ். மணியம்)
லூனாஸ்,
கூலிம் மாவட்டத்தில் அதிகமான மாணவர்களை கொண்டு இயங்கிவரும் தமிழ்ப்பள்ளிகளில் ஒன்று வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியாகும். இப்பள்ளி பல ஆண்டு காலமாக நிலப்பிரச்சினையை எதிர்நோக்கி வருகிறது. எனினும், நம் சமுதாயத்தை ஆட்கொண்டி ருக்கும் பல்வேறு போராட்டங்க ளுக்கிடையே இது இன்னமும் தீர்வு காணப்படாத ஒரு விவகாரமாகவே நிலவி வருகிறது.
வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியும் லூனாஸ் வெல்லெஸ்லி அம்மன் ஆலயமும் ஒரே இடத்தில் ஒரே நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இதுநாள் வரை பள்ளிக்கென்று தனி நிலப்பட்டா கிடையாது. அதை முறைபடி கேட்டால் அரசாங்கம் சார்ந்தவர்கள் அதற்கு முறையான பதில்களை தருவதில்லை என்றுதான் கூற வேண்டும். அரசாங்கம் இவ்விவகாரத்தில் அலட்சியம் காட்டுகிறது என்பதும் தெளிவாகின்றது.
வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஏறக்குறைய 500 மாணவர்கள் காலை, மாலை என்று இரண்டு பிரிவுகளாக பயின்று வருகின்றனர். இந்த மாணவர்கள் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து கொண்டுதான் வருகின்றது. இதற்காக, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் முடிந்த வரை புதிய இணைக் கட்டடத்தை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கும் தீர்மானத்தில் உள்ளனர்.
ஆனால் அவர்களால் இம்முயற்சியை செயல்படுத்த முடியவில்லை. பள்ளியின் நிலப்பட்டா பிரச்சினையே இதற்கு காரணமாகும் என்று கூறுகிறார் வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நடப்பு தலைவர் இராமலிங்கம்.
இதனை பற்றி விரிவாக கேட்ட பொழுது, ஓர் அரசாங்கப் பள்ளிக்கு குறைந்தது 4 முதல் 5 ஏக்கரில் நிலம் இருக்க வேண்டும். வெல்லெஸ்லி தோட்டத் தமிழ்ப்பள்ளி எத்தனை ஏக்கரில் அமைந்துள்ளது என்று தெரியவில்லை. காரணம், பள்ளி வளாகத்தில் ஓர் ஆலயமும் அமைந்துள்ளது. '' WELLESELY LUNAS RUBBER ESTATE SDN.BHD '' எனும் வெல்லெஸ்லி தோட்ட மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் இந்த வெல்லெஸ்லி தமிழ்ப்பள்ளி அமைந்துள்ளது. கடந்த 2006-இல் அந்த நிறுவனம் பள்ளியின் நிர்வாகத்துடன் ஓர் ஒப்பந்தத்தை செய்துகொண்டது.
Read More: Malaysia Nanban News Paper on 20.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்