img
img

கடந்த 2017 பட்ஜெட்டில் வழங்கப்பட்ட பாலர் பள்ளி தொடர்பான வாக்குறுதி என்னவானது?
திங்கள் 20 நவம்பர் 2017 12:47:49

img

மலேசிய இந்தியர்களின் தற்கால  அவல நிலையினை  பறைசாற்றுவதற்கான  சம்பவங்களும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும் எண்ணிக்கையில் அடங்காது  என்பதாகவே ஏவுகணை கருதுகிறது.கடந்த 60  ஆண்டுகால  சுதந்திரம் மலேசிய  இந்தியர்களின் பெரும்பாலான  உரிமைகளைப் பறித்து விட்டுள்ளதாகவே கருத வேண்டியுள்ளது. மலேசிய இந்தியர்களுக்கு அரசாங்கம் வழங்கிவரும் பெரும்பாலான வாக்குறுதிகள் கானல் நீராகிப் போன தற்கான  சான்றுகளை பட்டியலிடுவதற்கு  காலமே போதாது. 

மலேசிய இந்தியர்களுக்கு வழங்கிய  வாக்குறுதிகளும்  நிறைவேற்றப் படுவதில்லை என்பது  ஒரு புறம் இருந்தாலும் நியாயமாகக் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கைநழுவி  உள்ளதை  ஏவுகணையால்  பட்டியலிட முடியும். 

 * 7  புதிய  தமிழ்ப் பள்ளிகளுக்கான  வாக்குறுதியில்  ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே கட்டப்பட்டுள்ளது. 

* 11 ஆவது ஐந்தாண்டு  மலேசிய திட்டத்தில் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு  முழுமையாக மறுக்கப்பட்டிருக்கின்றது. 

*  அடையாள ஆவண  விவகாரங்களுக்கு பதிவு  நடவடிக்கைகள் மட்டுமே தீர்வாகக் காணப்பட்டுள்ளது. 

*  2018  ஆம் ஆண்டிற்கான  இரட்டை மொழி திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகள் முழுமையாக  விடுபட்டுள்ளன. 

* இந்தியர்களின்  ஏழ்மையைப் போக்குவதற்கான  நிரந்தர நடவடிக்கைகளுக்கான  வாக்குறுதிகள் மாயமாகியுள்ளன. 

*  இந்தியர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்புகள் முழுமையாக  விடைபெற்றுக் கொண்டுள்ளன. 

மலேசிய  இந்தியர்களின் இக்கட்டான  நிலைக்கு மூலக் காரணம்  நமது  அரசியல்  பிரதிநிதித்துவத்தின்  பலவீனமே என்பதை உறுதியாகக் கூற முடியும். 

வாக்குறுதியளிக்கப்பட்ட பாலர் பள்ளிகள் எங்கே? 

2017-  ஆம் ஆண்டிற்கான  வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், தமிழ்ப்பள்ளிகளில்  50 புதிய பாலர் பள்ளிகளை அமைப்பதற்கு வெ. 10 மில்லியன்  மானியத்தினை  அறிவித்திருந்தார். 2017  ஆம் ஆண்டில் 11 மாதங்கள் கடந்து விட்டிருக்கும் நிலையில் தமிழ்ப்பள்ளிகளில்  அமைக்கப்பட வேண்டிய புதிய 50 பாலர் பள்ளிகளின் கட்டுமானம் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் ஏன் மேற்கொள்ளப்பட வில்லை? 

*  50  புதிய பாலர் பள்ளிகளுக்கான   கட்டுமானக் குத்தகை வழங்கப்பட்டு விட்டதா? 

* 50  புதிய பாலர் பள்ளிகளுக்கான தமிழ்ப்பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு விட்டதா? 

* 50 புதிய பாலர் பள்ளிகளுக்கான மானியம் யாரிடம் உள்ளது? 

* 50 புதிய பாலர் பள்ளிகளின்  கட்டுமானம் யாருடைய தலைமையில்  கட்டப்படும்? 

*  50 புதிய பாலர் பள்ளிகளின்  கட்டுமானம் எப்போது நிறைவு பெறும்? 

போன்ற கேள்விகளுக்கு நிச்சயமாக ஏவுகணைக்கு பதில்கள் கிடைக்கப் போவதில்லை என்பதை உலகமே அறியும்!

வெறுங்கையால் முழம் போடும் வித்தையைத்தான்  60 ஆண்டுகால அரசாங்கம் மலேசிய  இந்தியர்களுக்கு நடத்தி வருகின்றதா என்ற கேள்விக்கு  நிச்சயமாக பதில்  ஆம் என்றே  இருக்க வேண்டும். 

வெ. 10 மில்லியன்  (வெ. 1கோடி) மானியம் ஒதுக்கீடு செய்யப்படும் (ஒரு பாலர் பள்ளியை  நிர்மாணிக்க  வெ. 200,000.00   ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது)  இன்றுவரை அதற்கான  சுவடுகளே இல்லாமல்  இருக்கும் அவலத்திற்கு யார் பொறுப்பான  பதிலை  வழங்கப்போகிறார்கள்? 

*  ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ  எஸ்.சுப்பிரமணியமா? 

* மலேசியக் கல்வியமைச்சின்   துணைக் கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனா? 

* தமிழ்ப்பள்ளிகளின்  மேம்பாட்டுத் திட்ட வரைவின்  இயக்குநர்  பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.இராஜேந்திரனா? அல்லது  

* மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கா? 

என்பதை  முடிவு செய்ய முடியுமா? மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் மூன்று மாத காலத்திலேயே  அனைத்தையும் மறந்து விடும் சமூகம் என்பதை  ஆராய்ந்து தெளிவு  படுத்தியுள்ள  சாதனைத் தலைவரின்  (துன் சாமி வேலு சங்கிலிமுத்து)  கண்டு பிடிப்பு  உண்மையானதாகவே  ஏவுகணை  கருதுகின்றது. 

மேம்பாட்டு திட்டவரைவின் அமலாக்கம் எங்கே? 

2012 -ஆம் ஆண்டில்  பூச்சோங் கின்ராறா தமிழ்ப்பள்ளிக்கு அதிகாரப்பூர்வ வருகையளித்திருந்த தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் தந்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ  நஜீப் துன் ரசாக் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால  மேம்பாட்டு திட்டவரைவினை (Pelan Tindakan Masa Depan Sekolah Tamil-PTST) அமலாக்கப்ப டுத்துவதற்கான நடவடிக்கையாக தனிப் பிரிவு  ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.

மலேசிய இந்தியர்களைப் பொறுத்தவரையில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறையே இனிப்பான வாக்குறுதிகள் மட்டுமே வழங்கப்படும் சூழலை தமிழ்ப்பள்ளிகளின்  மேம்பாட்டுத் திட்டமும்  அமைந்து விட்டதா? என்ற  அச்சம் ஏவுகணைக்கு எழுந்துள்ளது. பட்டியல்  1 இன்  வழி பிடிஎஸ்டி (PTST) வரையறுத்த திட்ட  நடவடிக்கைகளின்  விவரங்களை ஆராய்வோம். 

பட்டியல் 1 பாலர் பள்ளிகளுக்கான மேம்பாட்டு பரிந்துரைகள் 

பட்டியல்  1 இன்  படி   தமிழ்ப்பள்ளிகளுக்கான  எதிர் கால  மேம்பாட்டு செயல்வரைவின்  படி  2015, 2016, 2017  ஆம் ஆண்டுகளில்  இதுவரையிலும் 168  தமிழ்ப்பள்ளிகளில்  புதிய பாலர் பள்ளி வகுப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால்  திட்டம் திட்டமாகவே  இருக்கும் சூழலில்  ஒரு தமிழ்ப்பள்ளியில்  கூட  புதிய பாலர் வகுப்புகள் தொடங்கப்படவில்லை  என்பதை மலேசிய  இந்தியர்களில்  யாராவது  கவலைப்பட்டோமா? தமிழ்ப்பள்ளிகளைக் காப்பாற்றுவோம் என  கால்நடையாக நடக்கவிருக்கும் கூட்டம் கூட இதைப் பற்றி கவலைப்பட்டதாகவும் ஏவுகணை அறியவில்லை. 

மலேசிய இந்தியர்களின் மொழி  உரிமையைப் பறைசாற்றிவரும் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் வாக்குறுதிகள் (Menanam tebu di bibir)  உதட்டினிலேயே  கரும்பைப் பயிர் செய்யும்  என்பதன்  அடிப்படையிலேயே  இருப்பதாக ஏவுகணை  கருதுகின்றது. 

ம.இ.கா.வின் இயலாமையை 50  புதிய  பாலர் பள்ளிகளின்   நிர்மாணிப்பிலிருந்து உறுதியாக  அறிந்து கொள்ள முடியும். 

26.3.2017 ஆம் நாளில்  பாங்கி தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத் திறப்பு விழாவின்  போது உரையாற்றிய ம.இ.கா.வின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ சுப்பிரமணியம்    இவ்வாண்டு  (2017)  இறுதிக்குள் 50  புதிய  பாலர் பள்ளிகளின்  கட்டுமானம் தொடங்கப்படும் என்று கூறிய வாக்குறுதி என்னவானது?

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களை தனி சிறப்புப் பிரிவு  மேற்கொண்டு வரும் நிலையில் ம.இ.கா.வின்  மூலம் செயல்படுத்துவது ஏன்? வெ. 10  மில்லியன்  தொகை இப்போது  யாருடைய  வசம் உள்ளது? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத அவலங்களுக்குத் தீர்வு  வருமா என்ற கேள்வியோடு  நாளை தொடர்வோம். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img