(பார்த்திபன் நாகராஜன் / ஆர். குணா)
கோலாலம்பூர்,
கூட்டரசுப் பிரதேச அமைச்சும், கோலாலம்பூர் மாநகர் மன்றமும் (டிபிகேஎல்) எங்களுக்கு வீடுகள் கொடுக்காமல் தொடர்ந்து பந்தாடி வருகின்றன என்று ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடுகளின் குடியிருப்பாளர்கள் நேற்று குற்றம் சாட்டினர். ஜிஞ்சாங் உத்தாரா நீண்ட வீடமைப்புப் பகுதியில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இப்பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என கூட்டரசுப் பிரதேச அமைச்சும், கோலாலம்பூர் மாநகர் மன்றமும் வாக்குறுதிகளை வழங்கினர்.பல ஆண்டுகள் போராட்டங்களுக்கு பின் பிபிஆர் ஸ்ரீ அமான் எனும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி இங்கு வாழும் மக்களுக்கு கட்டப்பட்டது. சுமார் 1,000 வீடுகள் அங்கு கட்டப்பட்டன.இவ்வீடுகளுக்கு மாறி செல்ல மக்களுக்கு கட்டங்கட்டமாக சாவிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் ஒரு பகுதி மக்கள் அவ்வீடுகளுக்கு மாறி சென்றனர். ஆனால் 400க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டு சாவிகள் கிடைக்காமல் தொடர்ந்து போராடிதான் வருகின்றன.வீட்டுக்கான பல குடும்பங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. இதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் முறையாக பதில் சொல்லாமல் மக்களை தொடர்ந்து பந்தாடி வருகின்றனர் என்று பெர்மாஸ் இயக்கத்தின் தலைவர் மைக்கல் இஸ்கண்டார் செய்தியாளர்களிடம் கூறினார்.
Read More: Malaysia Nanban News Paper on 17.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்