கோலாலம்பூர், நவ. 17-
வங்கியின் ஒப்புதல் இன்றி மூன்றாம் தரப்பினருக்கு தங்கள் கார்களைக் குத்தகைக்கு விடும் உரிமையாளர்கள் மீது அபராதம் அல்லது சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். கடனைத் திருப்பி செலுத்துவதற்காக, மூன்றாம் நபருக்கு குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிப்பது,வாடகை கொள்முதல் சட்டம் 1967 ஐ மீறுவது ஆகும் என்று ஜாஹிட் கூறினார்.
வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்துவதற்காக, கார்களை குத்தகைக்கு கொடுப்பது உண்மையில் உள்நாட்டு வாணிக, கூட்டுறவு, பயனீட்டாளர் அமைச்சின் அதிகாரத்தின் கீழ் வாடகை கொள்முதல் சட்ட கோட்பாடுகளை மீறுவது ஆகும் என்று அவர் நேற்று நாடாளுமன்றத்தில் எழுத்துப் பூர்வமாகப் பதிலளித்தார்.
வங்கிக் கடனைத் தொடர்ந்து செலுத்தும் திட்டங்களில் ஏற்படும் மோசடிகளை விளக்குமாறு லிம் லிப் எங் (ஜ.செ.க. சிகாம்புட்) கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். வங்கிக் கடன் ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும்போது, ஓர் உரிமையாளர் தன் காரை விற்பனை செய்வது, உரிமையாளர் கொள்முதல் சட்டம் 1967, செக்ஷனின் இன் கீழ் வெ.30,000 அபராதம் அல்லது 3 ஆண்டுகள் சிறைவாசம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.
Read More: Malaysia Nanban News Paper on 17.11.207
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்