பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஐநா பொதுப் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாதது வழக்கத்துக்கு மாறானதல்ல என்கிறார் துணைப் பிரதமர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி. ஐநா கூட்டத்துக்குச் செல்லும் மலேசியப் பேராளர் குழுவுக்குத் தலைமைதாங்கும் பொறுப்பைத் துணைப் பிரதமருக்குக் கொடுப்பது புதிதல்ல. பல நாடுகள் அதைத்தான் செய்துள்ளன என்றாரவர். “வெளியுறவு அமைச்சரோ துணைப் பிரதமரோ மலேசியப் பேராளராக ஐநா பேரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கத்திற்கு மாறானதல்ல. ஐநாவின் 193 உறுப்பு நாடுகளில் இதுவரை 54, மலேசியாவின் அண்டைநாடான இந்தோனேசியா உள்பட, அவற்றின் அரசாங்கத் தலைவர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நீண்டகாலப் பிரதமரின் ஆட்சியின்போதுகூட அவரைப் பிரதிநிதித்து மற்றவர்கள்தான் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்”, என அஹ்மட் ஜாஹிட் கூறினார். “இது சிறு விசயம். இதைப் பெரிதுபடுத்த வேண்டாம்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்