(பார்த்திபன் நாகராஜன்)
கோலாலம்பூர்,
மண்ணின் மைந்தர்களின் படைப்புகளை திரையரங்குகளில் ஓரங்கட்டுவது ஏன் என்று ஜாங்கிரி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் நேற்று கேள்வி எழுப்பினார்.மலேசியாவில் உள்ள கலைஞர் கள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் படைப்புகளை படைக்கின்றனர்.
அப்படிப்பட்ட படைப்புகளுக்கு திரையரங்குகளில் போதுமான காட்சிகள் ஒதுக்கப்படாதது எங்களைப் போன்ற இளம் தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.வெளிநாட்டு திரைப்படங்க ளுக்கு மூன்று, நான்கு வாரங்கள் காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன.ஆனால் மலேசிய திரைப்படங் களுக்கு மூன்று நாட்கள் மட்டுமே காட்சிகள் ஒதுக்கப்படுகின்றன. இந்த மூன்று நாட்களில் படம் சரியாக ஓடவில்லை என்றால் காட்சிகள் குறைக்கப்படுகின்றன.
மூன்று நாட்களில் படம் பார்ப்பவர்கள் தெரிவிக்கும் விமர்சனங் களை பார்த்து தான் மக்கள் அப் படங்களை பார்க்க திரையரங்கு களுக்கு வருகின்றனர். அப்படி வரும் மக்களுக்கு காட்சிகள் இல்லை என்று கூறும் போது அவர்கள் ஏமாற்றத்துடன் தான் வீடு திரும்புகின்றனர்.இதனால் தான் மலேசிய திரைப்படங்களுக்கு மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று நந்தினி குறிப்பிட்டார்.
Read More: Malaysia nanban News Paper on 15.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்