பினாங்கு,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளந்தான் மாநில மக்களுக்கு தலா 500 வெள்ளி நிவாரண நிதியை மத்திய அரசாங்கம் வழங்கும் போது, பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவ்வாறு வழங்க மறுப்பது ஏன் என்று மாநில முதலமைச்சர் லிம் குவான் எங் கேள்வி எழுப்பியுள்ளார். அது தொடர்பாக புத்ராஜெயா விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தை கருணையோடு பரிசீலனை செய்து அத்தகைய நிதியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்க வேண்டும் என்று லிம் குவான் எங் கேட்டுக்கொண்டார்.
பினாங்கில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பில் கடந்த நவம்பர் 7 ஆம் தேதி பினாங்கு, செபராங் பிறைக்கு வருகை புரிந்த பிரதமர் நஜீப், மக்கள் படும் துயரத்தை நேரடியாக பார்வையிட்டு சென்றுள்ளார் என்று நேற்று பினாங்கு சட்டமன்றத்தில் மாநிலத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் லிம் இவ்வாறு தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban Tamil News Paper on 15.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்