(எம்.கே.வள்ளுவன்)
ஜொகூர் பாரு,
தனது இரு பெண் பிள்ளைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக தாயார் ஒருவருக்கு ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று 75 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
39 வயதுடைய அந்த தாயாருக்கு எதிராக மொத்தம் 10 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்ட வேளையில் குற்றச்சாட்டுகளை அப்பெண்மணி ஒப்புக் கொண்டதால் செஷன்ஸ் நீதிபதி கமாருடின் கம்சுன் அத்தண்டனையை விதித்தார்.
கடந்த அக்டோபர் முதல் தேதி காலை 9.25 மணிக்கும் பிற்பகல் 12.21 மணிக்கும் இடையிலும், அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் 7 ஆம் தேதிக்கும் இடை யிலும் ஜொகூர் பாரு லார்க்கின் பெர்டானா ஜாலான் சூசூர் டெவேட்டா 1 லுள்ள விடுதியொன்றில் தனது 10, 13 வயதுடைய மகள்களை விபச்சா ரத்தில் ஈடுபடுத்திய காரணத்திற்காக சிறுமிகளின் தாயாருக்கு அத்தண்டனை விதிக்கப்பட்டது.
2001 ஆம் ஆண்டு சிறுவர்கள் சட்டம் பிரிவு 31, 2017 சிறுவர்கள் பாலியல் சட்டம் பிரிவு 16 (1) இன் கீழ் முன்னதாக சிறுமிகளின் தாயார் மீது பத்து குற்றச்சாட்டுகளும் கொண்டு வரப்பட்டன. இரு சிறுமிகளை அக்டோபர் முதல் தேதி, 4,5,6,7 ஆம் தேதிகளில் விபச்சாரத்தில் ஐந்து முறை ஈடு படுத்தியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தனது மகள்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதன் மூலம் ஒரு வெள்ளி 5 வெள்ளி, 10 வெள்ளி, 20 வெள்ளி, 50 வெள்ளியும் மகள்களின் விபச்சார சேவைக்காக தாயார் பெற்றுள்ளார்.
Read More: Malaysia nanban News paper on 14.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்