மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் சுரண்டல்களுக்கு நீண்ட பட்டியலைத் தயாரிக்க முடியும் என்பதே ஏவுகணையின் வாதமாகும். கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களின் ஒரே அரசாங்க அரசியல் பிரதிநிதி யாக இருந்து வரும் மஇகாவின் செயல்பாடுகளால் சமூகப் பொருளாதார மேம்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் சறுக்கல்களை ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே அறிய வேண்டியுள்ளது.
மைக்கா ஹோல்டிங்ஸ் மெகா திட்டம் மலேசிய இந்தியர்களின் எதிர்பார்ப் பினை தரைமட்டமாக்கிய தோடு நின்று விடாமல் மேலும் ஒரு மெகா திட்டமான எம்.ஐ.இ.டி. உயர்கல்வி திட்டமும் மலேசிய இந்தியர் களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டுள்ளதாகவே அறிய வேண்டியுள்ளதாக ஏவுகணை கருதுகின்றது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் மற்றும் எம்.ஐ.இ.டி. ஆகிய இரண்டு மிகப்பெரிய ஸ்தாபனங்களும் 100% மஇகாவின் உடைமையா என்ற கேள்விக்கு இன்றுவரை சரியான பதில்களை ஏவுகணை பெறவே இல்லை. அதன் விளைவாகவே இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியான கேள்விகளை எழுப்ப வேண்டிய அவலங்கள் ஏற்பட்டுள்ளன.
கேள்வியே கேட்க முடியாத அதிகாரத்தில் இருந்ததன் பயனாக மைக்கா ஹோல் டிங்ஸ் நிறுவனத்தை நம்பி முதலீடு செய்திருந்த 66,000 ஏழை இந்தியர்கள் வானம் பார்த்த பூமியாய் ஏமாந்து போனதைப் போன்று இன்று சுயநினைவுகளையே இழந்து வரும் சாதனைத் தலைவரினால் வாழை இரண்டு முறை குலை தள்ளும் விபரீதம் நடந்து விடக்கூடாது என்பதே ஏவுகணையின் எதிர்பார்ப்பு ஆகும்.
ஏய்ம்ஸ்ட் நிறுவனத்தின் சில தகவல்கள்
மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால சுதந்திர வரலாற் றில் கேள்விகள் கேட்காமலேயே இழந்தவை கொஞ்ச நஞ்சமல்ல. தோட்டப்புறங்களிலிருந்து சுமார் 800,000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்களை இடம்பெயர்வு செய்தபோது கேள்வியே எழுப்பாமல் வெறும் வெ.7,000த்தை நஷ்ட ஈடாக வழங்கி நகர்ப்புற முன்னோடிக ளாக வாழ்வியலைத் தொலைத் ததோடு மட்டுமல்லாமல் இரண்டு தலைமுறைகளையும் சமூகச் சீர்கேடுகளுக்கு பலி யாக்கி யிருக்கும் கசப்பான சம்பவத்திற்குப் பின்னரும் கேள்வி எழுப்பாத சமூகமாக இருந்து விட்டால் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்திற்கு நமது சார்பில் வழங்கப்பட்டிருக்கும் வெ. 500 மில்லியன் தனியார் உடைமையாக மாறி விடாதா?
மலேசிய அரசாங்கம் மலேசியாவில் வாழும் 26 லட்சம் இந்தியர்களின் சார்பா கவே மாஜு கல்வி மேம்பாட்டு கழகத்திற்கு நிலத்தோடு ஏறக்குறைய வெ.370 மில்லியனையும் வழங்கியுள்ளது என்பதை மறுக்கவே முடியாது. மலேசிய இந்தியர்களின் சார்பாக வழங்கப்பட்ட மிகப்பெரிய தொகையின் வழி ஏய்ம்ஸ்ட் சென். பெர்ஹாட் நிறுவனம் (AIMST Sdn. Bhd.)
* 2016ஆம் ஆண்டில் வெ.110,712,328.00 (சுமார் வெ.11 கோடி)ஐ வருமானமாக ஈட்டியுள்ளது.
* 2016ஆம் ஆண்டில் வெ. 10,320,553.00 (சுமார் வெ. 1 கோடி)ஐ வரிக்கு முந்தைய லாபமாகப் பெற்றுள்ளது.
* 2016ஆம் ஆண்டில் வெ. 25,739,337.00 (சுமார் வெ. 2.5 கோடி)ஐக் கடனாகக் கொண்டுள்ளது.
* 2016ஆம் ஆண்டில் நிகழ்கால சொத்தாக (Current Assetts) வெ. 27,979,101.00 (சுமார் வெ. 27.9 கோடி)ஐப் பெற்றுள்ளது.
* 2016ஆம் ஆண்டு வரையில் சொத்தாகக் (Non. Current Assetts) வெ. 54,551,792.00 (சுமார் வெ. 5.4 கோடி)ஐக் கொண்டிருக்கின்றது.
மேற்காணப்படும் நிறுவன விவரங்களை முழுமையாக ஆய்வு செய்தால் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் முழுமையாக (100%) Maju Institute of Educational Development" எனப்படும் மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகத்தின் 20,000,000 (2 கோடி) பங்குகளின் வழி உரிமையாளராக செயல்படுவதைக் காண முடிகின்றது. ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் 100% மாஜு கல்வி மேம்பாட்டு கழகத்தின் உடைமையாகும். ஆனால் மாஜு கல்வி மேம்பாட்டுக் கழகம் 100% மஇகாவினுடையதா என்ற கேள்விக்கு டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் மௌனம் கலைந்து பதில் கூறுவாரா?
* ஏய்ம்ஸ்ட் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் (496741-P) தற்போதைய பதிவு பெற்ற இயக்குநர்களாக; எஸ்.சாமிவேலு சங்கிலிமுத்து, டத்தோஸ்ரீ வீரசிங்கம் சுப்பையா, டத்தோ வெண்கட்ரமணன் விஸ்வநாதன், ராஜேந்திரன் நாகப்பன், டத்தோ டாக்டர் புண்ணியமூர்த்தி கிருஷ்ணசாமி, அமரேந்திரன் பெருமாள், டத்தோ வாசன் சின்னதுரை, டத்தோ டாக்டர் செல்வகுமார் மூக்கையா, எம்.இராமநாதன் மெய்யப்பன் ஆகிய 9 பேர்களில் யாருமே தற்போதைய மஇகாவின் தலைமைத்துவ பொறுப்பினில் இல்லாதது ஏன்?
* ஏய்ம்ஸ்ட் சென். பெர்ஹாட் வரிக்கு முந்தைய லாபமாகப் பெற்றிருக்கும் வெ. 1 கோடி யாருக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது?
* மலேசிய இந்தியர்களின் சார்பில் பெறப்பட்டிருக்கும் வெ. 500 மில்லியன் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதைதானா?
போன்ற கேள்விகளுக்குப் பொறுப்பானவர்கள் பதில் தருவார்களா?
வெ. 500 மில்லியனில்...
வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே!" எனக் கூறப்படும் சிங்காரச் சொல் மலேசிய இந்தியர்களுக்கும் பொருந்தி வருவதாகவே ஏவுகணை கருதுகின்றது. அடுத்தவரை எல்லாம் (தலைவர்களை) சிறப்போடும் பதவிகளோடும் பட்டங்களோடும் வருமானத்தோடும் வாழ வைத்து பெருமைப்படும் (அல்லல் படும்) இனமாகவே இன்னமும் வாழ்ந்து வருவதை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில்தான் பதிவு செய்ய வேண்டும். மலேசிய அரசாங்கம் மலேசிய இந்தியர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை உறுதி செய்ய வெ. 370 மில்லியனோடு 228 ஏக்கர் நிலத்தையும் வழங்கியிருந்ததன் வழி மஇகாவினால் கட்டப்பட்டிருக்கும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம்;
* எத்தனை பி40 இந்திய மாணவர்களின் உயர்கல்வி தேவையை நிறைவு செய்துள்ளது?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்