டாக்டர் மகாதிர் முகம்மட்டும் அன்வார் இப்ராகிமும் தேசிய பாதுகாப்பு மன்ற(என்எஸ்சி)ச் சட்டத்தைக் கண்டித்துக் கூட்டறிக்கை விடுத்துள்ளனர். பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அரசாங்கம் கொண்டுவந்த அச்சட்டம் ஜனநாயகக் கட்டமைப்புக்கு எதிரானது என்றவர்கள் கூறினர். “எங்கள் பார்வையில், போலீஸ், மலேசிய ஊழல்தடுப்பு ஆணையம், சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், பேங்க் நெகரா போன்ற முக்கிய அமைப்புகள் எல்லாமே அவரது கட்டுப்பாட்டில் உள்ளன”, என்று அவ்விருவரும் அவ்வறிக்கையில் கூறியுள்ளனர். “இச்சட்டம் பாதுகாப்பு, மக்களின் உரிமைகள் போன்ற முக்கியமான விவகாரங்களில் பேரரசர் மற்றும் ஆட்சியாளர் மன்றத்தின் அதிகாரத்தையும் ஓரங்கட்டுகிறது”, என்றவர்கள் குறிப்பிட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்