கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மக்களின் இதயங்களை கவர வேண்டுமானால் கிடுகிடு ஏற்றம் கண்டு வரும் எரிபொருளுக்கு அரசாங்கம் மானியம் கொடுக்க வேண்டும் என்றார் பாண்டான் பி.கே.ஆர். நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லி. எரிபொருளுக்கு இவ்வாண்டு டிசம்பர் மாதம் தொடங்கி அடுத்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை லிட்டருக்கு 20 காசு மானியம் வழங்க வேண்டும் என்று அந்த எம்.பி. கூறினார்.
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மக்களுக்கு இக்கட்டான மாதங்கள் ஆகும். பள்ளி திறக்கப்படுவதால் பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும், காலணிகள் வாங்க வேண்டும், என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.
கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி முதல் நான்காவது முறையாக எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. பெட்ரோல் ரோன் 95 இன் நேற்று முன்தினம் முதல் 7 காசு உயர்ந்துள்ளது. அது தற்போது லிட்டருக்கு வெ. 2.31 ஆக உயர்வு கண்டுள்ளது. கடந்த வாரம் லிட்டருக்கு வெ.2. 54 விலையில் இருந்த பெட்ரோல் ரோன் 97 லிட்டருக்கு 6 காசு அதிகரித்து தற்போது வெ. 2.60 விலையில் உள்ளது.
Read More: Malaysia nanban News paper on 10.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்