கோலாலம்பூர்,
நாட்டில் மூன்றாவது பெரிய இனமாக திகழும் இந்தியர்களுக்கு 7 விழுக்காடு அரசாங்க வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்பட வேண்டுமானால் அர சாங்க வேலைகளுக்கு ஆள் எடுக்கும் பிரதான அமைப்பான பொதுச்சேவைத்துறை ஆணையத்தின் (எஸ்.பி.ஏ.) ஆள் சேர்ப்புப் பிரிவு, சிறப்பு ஆள் சேர்ப்புப் பிரிவு, தேர்வுப்பிரிவு ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் பல்லினங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது.
எஸ்.பி.ஏ. தேர்வு செய்யக்கூடிய மனுதாரர்கள் இனபாகுபாடுயின்றி, தகுதி திறன் ரீதியாக நேர்மையாகவும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்ய இது அவசியமாகிறது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அரசாங்க வேலை வாய்ப்புகள் இந்தியர்க ளிடமிருந்து பெருவாரியாக விடுபட்டதற்கு அரசாங்கத்தின் தற்போதைய நடைமுறைகளே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக, அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகளை முழுமையாக நிர்ணயம் செய்யும் இயந்திரமாக செயல்படும் பொதுச்சேவைத்துறை ஆணையத்தில் ( Suruhanjaya Perkhidmatan Awam) பணியாற்றும் அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆணையத்தில் மொத்தம் 308 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 302 பேர் மலாய்க்காரர்கள் ஆவர். சீனர்கள் 2 பேர். இந்தியர்கள் 4 பேர் மட்டுமே பணி யாற்றுகின்றனர்.
அரசாங்க வேலைகளுக்கு ஆள்பலத்தை அமர்த்துவதில் பொதுச்சேவைத்துறை ஆணையத்தின் ஆள் சேர்ப்புப் பிரிவு முக்கிய பங்காற்றுகிறது. பட்டப்ப டிப்பு, டிப்ளோமா உட்பட இதர உயர்ந்த கல்வித்தகுதிகளை கொண்டவர்களை வேலைக்கு எடுப்பதில் இப்பிரிவுதான் முதன்மை பங்காற்றுகிறது. ஆனால், இந்த முக்கியப்பிரிவில் 56 பேர் பணியாற்றுகின்றனர். இந்த 56 பேரும் மலாய்க்காரர்களாக இருக்கின்றனர்.
அதேவேளையில் எஸ்.பி.எம். கல்வித்தகுதி கொண்ட கீழ்நிலை வேலைகளுக்கு நேர்காணல் நடத்தி ஆள்பலத்தை தேர்வு செய்வது அந்த ஆணையத்தின் சிறப்பு ஆள் சேர்ப்புப் பிரிவாகும். அந்தப்பிரிவில் 65 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் 63 பேர் மலாய்க்காரர்கள் ஆவர்.சீனர்கள், இந்தியர்கள் தலா ஒருவர் அதில் அங்கம் வகிக்கின்றனர்.
சில வேளைகளில் ஆள் சேர்க்கும் பணி இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, முதலில் தேர்வு நடத்துவதாகும். இப்பணியை அந்த ஆணையத்தின் தேர்வு பிரிவு நடத்துகிறது. இந்த தேர்வு பிரிவில் 27 பேர் பணியாற்றுகின்றனர். அந்த 27 பேரும் மலாய்க்காரர்கள் ஆவர். ஒருவர்கூட சீனரோ, இந்தியரோ இல்லை. இந்த தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களே ஆணையத்தின் அடுத்த கட்ட நேர்முகப்பேட்டிக்கு அழைக்கப்படுகிறார்கள்.
அரசாங்க வேலைக்கு ஆள் எடுக்கும் பொதுச்சேவைத்துறை ஆணையத்தின் முக்கியப்பிரிவுகளாக இருக்கும் ஆள்சேர்ப்புப் பிரிவு, சிறப்பு ஆள் சேர்ப்புப் பிரிவு, தேர்வுப்பிரிவு ஆகியவை ஒரே இனத்தை சார்ந்தவர்கள் பெரும்பான்மையினராக இருப்பதைக் காட்டிலும் பல்லினத்தவர்களை பிரதிபலிக்கும் ஓர் ஆணையமாக எஸ்.பி.ஏ. இருக்குமானால் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படக்கூடிய ஓர் ஆணையமாக அது திகழ முடியும்.
மலேசிய இந்தியர்களுக்கான செயல் வரைவு திட்ட ( புளூபிரிண்ட் திட்டம்) தொடக்கவிழா மட்டுமின்றி கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது, பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அறிவித்த இந்தியர்களுக்கான 7 விழுக்காடு அரசாங்க வேலை வாய்ப்புகள் வாக்குறுதி, நிறைவேற்றப்பட வேண்டுமானால் பொதுச் சேவைத்துறையில் மிகப்பெரிய உருமாற்றம் அவசியமாகிறது.
இந்த உருமாற்றத்தின் மூலமாகவே அரசாங்க வேலை வாய்ப்புகளில் இந்தியர்கள் அதிகளவில் பங்கேற்பதை உறுதி செய்ய முடியும். அதற்கு முதற்கட்ட மாக அரசாங்க வேலைகளுக்கு ஆள் எடுக்கும் பிரதான இயந்திரமாக செயல்படும் பொதுச்சேவைத்துறை ஆணையத்தில் (எஸ்.பி.ஏ.) மூன்று முக்கியப் பிரிவுகளிலும் இந்தியர்களின் பிரநிதித்துவம் போதுமான அளவில் இருப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு உறுதி செய்தால் மட்டுமே பிரதமரின் வாக்குறுதியான அந்த 7 விழுக்காடு வேலை வாய்ப்புகளை பெறும் கனவு நிறைவேறும் என்பதே பெரும்பாலோரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்