img
img

சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்தலாமா என்று பக்கத்தான் ஹராபான் ஆராய வேண்டும்
திங்கள் 19 செப்டம்பர் 2016 13:35:59

img

சிலாங்கூரில் திடீர் தேர்தல் நடத்தலாமா என்று பக்கத்தான் ஹராபான் ஆராய வேண்டும். சிலாங்கூரில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அம்னோவின் கைக்குச் செல்லும் வகையில் தேர்தல் ஆணையம் (இசி) தேர்தல் தொகுதி எல்லைகளைத் திருத்தி அமைத்திருப்பதால் அவ்வாறு செய்வது அவசியமாகிறது என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் கூறினார். தேர்தல் தொகுதி எல்லைகள் திருத்தி அமைப்பது அம்னோ/பிஎன்னுக்குச் சாதகமாக உள்ளது என்று கூறப்படுவதை மறுக்கும் அம்னோ துணை அமைச்சர் ரசாலி இப்ராகிம், சிலாங்கூரில் தொகுதி எல்லைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள திருத்தங்களைப் பார்க்க வேண்டும் என்று லிம் அறிவுறுத்தினார். “ரசாலிக்கும் மற்ற அம்னோ தலைவர்களுக்கும் உண்மை தெரியும், ஆனால், தெரியாததுபோல் நடிக்கிறார்கள்”, என்றாரவர். இதனிடையே, தேர்தல் தொகுதி எல்லைகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திருத்தங்களை எதிர்த்து வழக்கு தொடுப்பது குறித்து டிஏபி பரிசீலிப்பதாக அதன் ஏற்பாட்டுச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார். நேற்று, கட்சியின் மூன்றரை மணி-நேரக் கூட்டத்தில் அது குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தாக ஓரியண்டல் டெய்லி கூறியது

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img