கோலாலம்பூர், நவ. 9-
பெட்ரோல் விலை வரலாறு காணாத வகையில் ஏற்றம் கண்டுள்ளது. ரோன் 95 லிட்டருக்கு 7 காசு உயர்வு கண்டுள்ள வேளையில் ரோன் 97 லிட்டருக்கு 6 காசு ஏற்றம் கண்டுள்ளது. டீசல் லிட்டருக்கு 3 காசு உயர்வு கண்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி லிட்டருக்கு வெ. 2.24 ஆக இருந்த பெட் ரோல் ரோன் 95 நள்ளிரவு முதல் வெ.2.31 ஆக உயர்வு கண் டுள்ளது. லிட்டருக்கு வெ. 2.54 ஆக இருந்த பெட்ரோல் ரோன் 97 வெ.2.60 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நேரத்தில் பெட்ரோல் லிட்டருக்கு 7 காசு உயர்த்தப்பட்டு இருப்பது பயனீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
லிட்டருக்கு வெ. 2. 17 ஆக இருந்த டீசல் வெ. 2.20 ஆக உயர்ந் துள்ளது. இந்த புதிய விலை நவம்பர் 9 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் அறிவிக்கப்படும் எரிபொருள் புதிய விலை கடந்த மார்ச் 29 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரேடியாக 7 காசு எகிறியிருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரையில் வாராந்திர புதிய விலைகள் 3 முதல் 4 காசு உயர்வை மட்டுமே சார்ந்திருந்தது. எனினும் முதல் முறையாக 7 காசு உயர்ந்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்