ஜார்ஜ்டவுன்,
பினாங்கில் வெள்ளப்பிரச்சினையை அரசியலாக்கக்கூடாது. அதனை மக்கள் பிரச்சினையாகவே பார்க்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கேட்டுக்கொண்டார். இவ்விவகாரத்தில் ஒரு தரப்பு மற்றொரு தரப்பை குற்றஞ்சாட்டிக்கொள்ளும் போக்கு ஒரு போதும் கூடாது என்று 22 ஆண்டு காலம் நாட்டின் பிரதமராக வழிநடத்தியவருமான துன் மகாதீர் ஆலோசனை கூறினார். அந்த வகையில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பிரச்சினையை எந்தவொரு தரப்பும் அரசியலாக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை துன் மகாதீர் வெகுவாக பாராட்டினார். வெள்ளம் என்பது இயற்கை சீற்றம். அது மக்களின் பிரச்சினையாகவே அணுக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
பினாங்கு வெள்ளத்திற்கு ஜ.செ.க. தலைமையிலான பினாங்கு அரசாங்கத்தை பல்வேறு தரப்பினர் குறைகூறி வருகின்றனர். முறையான வடிகால், நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தாததால் இந்த திடீர் வெள்ளத்திற்கு காரணம் என்று குறைகூறி வருகின்றனர்.
Read More: Malaysia Nanban News Paper on 9.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்