img
img

7% அரசாங்க வேலைவாய்ப்புகள் நிலாச்சோறு கதையாகுமா?
புதன் 08 நவம்பர் 2017 13:49:30

img

மலேசியாவின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக அர்ப்பணித்த வர்கள் இந்தியர்கள் எனும் வரலாறு முழுமையாக மறைக்கப்பட்டு விட்டதை அனைவரும் அறிவோம். ரப்பர் மரத்திற்கும் செம்பனை மரங்களுக்கும் மட்டுமே முகவரியைத் தராத 200 ஆண்டு கால இந்தியர்கள் சாலைகளுக்கும் தந்தித் தூண்களுக்கும் மின்சார கடத்திகளுக்கும் துறைமுகத் தூண்களுக்கும் முகவரியைக் கொடுத்தவர்கள் 60 ஆண்டு கால சுதந்திரத்தின் வழி முழுமையாக முகவரிகளைத் தொலைத்து விட்ட அவலத்திற்கு ஆறுதல் மட்டுமே கூற முடியும்.

ரப்பர் மரத்தைச் சீவுவதற்குக் குனிந்த முத்துசாமி நிமிரவே இல்லை. சூட்டோடு சூடாக கருத்துப் போய் தார்சாலை யைப் போட்ட கந்தசாமிக்கு வாழ்வியலே இல்லை. வெளிக்காட்டு வேலைக்கு ஆளாய்ப் பறந்த மீனாட்சிக்கு தங்குவதற்குக் கூரையே இல்லை. உயிரையும் பணயம் வைத்து நாட்டை உருவாக்கியவர்களின் இன்றைய தலைமுறை யினருக்கு உரிமையே இல்லாமல் போய்விட்டது. 

60 ஆண்டுகளில் அனைத்து உரிமைகளையும் அடைமானம் வைத்துவிட்ட அரசியல் பிரதிநிதித்துவத்தின் சாகசத்தி னால் நாளைய விடியலில் கையேந்தி நிற்கும் சமூகமாக மாறுவதைத் தவிர மாற்று வழி உண்டா என்றே ஏவுகணை கேட்கின்றது. ஆண்டுதோறும் சடங்குப்பூர்வமாக அறிவிக் கப்படும் பட்ஜெட்டில் மட்டுமே இந்தியர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப் படுவதாக ஏவுகணை கருதுகின்றது. 2018ஆம் ஆண்டிற்கான மொத்த பட்ஜெட் வெ. 280 பில்லியன். இந்தியர்களுக்கு வெறும் வெ. 100 மில்லியன் மட்டுமே மானிய ஒதுக்கீடு. ஏற்கெனவே ஒடுக்கப்படும் சமூகமாக எல்லா துறைகளிலும் விடுபட்டுள்ளோம் என்பதற்குச் சான்றுகளே தேவையில்லை. குட்டக் குட்டக் குனியும் சமூகமாக உருமாற்றம் பெற்றுள்ள மலேசிய இந்திய சமூகத்திற்கு விடியலுக்கான தூரம் அறவே தெரியவில்லை என்பதே  சத்தியமான உண்மையாகும்.

குதிரைக் கொம்பான வேலை வாய்ப்புகள்!

கோழி மேய்த்தாலும் கும்மனியில் மேய்க்க வேண்டும்" என்ற தாரக மந்திரத்திற்குச் சொந்தக்காரர்கள் மலேசிய இந்தியர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அரசாங்க வேலை வாய்ப்புகள் இருந்தால் குடும்பத்தின் எதிர்காலத்தினை மேம்படுத்திவிட முடியும் என்பதை நிரூபித்தவர்கள் நமது சமூகத்தினர்.

* ஜே.கே.ஆரில் வேலை செய்த சாதாரணத் தொழிலாளர்கள்!

* மின்சார வாரியத்தில் தூண்களைப் பொருத்தும் தொழிலாளர்கள்!

* மாவட்ட இலாகாக்களில் சாதாரண வேலையைச் செய்தவர்கள்!

* அலுவலகங்களில் தோட்டக்காரர்களாக பணியாற்றியவர்கள்!

ஆகியோரின் பிள்ளைகளே மருத்துவர்களாகவும் பொறியியலாளர்களாகவும்  ஆசிரியர்களாகவும் வழக்கறிஞர்களாகவும் உருவான நிஜத்தினை யாராவது மறுக்க முடியுமா? நிரந்தர வேலையால் தலைமுறையின் தலையெழுத் தை மாற்றிய சூழல் இன்று நம்மிடமிருந்து அபகரிக்கப்பட்டு விட்டதை யாராவது கேட்டார்களா?

ஆமாம் சாமி" போட்டே நமது அனைத்து வாய்ப்புகளுக் கும் சமாதி கட்டிக் கொண்ட பெருமை நமது அரசியல் தலைவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதே ஏவுகணையின் வாதமாகும்.

* தனியார் மயக் கொள்கை மலேசிய இந்தியர்களின் அரசாங்க வேலை வாய்ப்புகளை ஒட்டு மொத்தமாக சூறையாடி விட்டது.

* புதிய பொருளாதாரக் கொள்கை (DEB) இந்தியர்களின் அரசாங்க பங்களிப்பை முழுமை யாக முடிவுக்குக் கொண்டு வந்தது.

* அரசாங்க வேலை வாய்ப்பு களின் நடைமுறை மாற்றங் களால் 3 விழுக்காட்டிற்கும் குறைவாகிப் போன அவலங்கள்.

* தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைத் தவிர வேறு அரசாங்க வேலை வாய்ப்புகளே இல்லை எனும் எழுதாத சட்ட அமலாக்கம்!

என ஒட்டுமொத்தமாகவே ஓரங்கட்டப்படும் சமூகமாக மாறி வருவதற்கு  நிவாரணம் தேடப்படவில்லை என்பதே நாம் வாங்கி வந்த சாபமாகும்!

சாத்தியப்படாத வாக்குறுதியா?

2018ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின்போது இடைச் செருகலாகப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய இந்திய சமூகத்தினருக்கு 7 விழுக்காடு (7%) அரசாங்க வேலை வாய்ப்பு களுக்கு திட்டம் வரையப்படும் என கூறியிருந்தார்.  பட்ஜெட்  அறிவிப்பிற்கும் இந்தியர்களின் அரசாங்க வேலை வாய்ப்பிற்கும்  பொருந்தாத இடத்தில் கூறப்பட்டிருக்கும் சூழல் அழும் குழந்தைகளுக்கு நிலாவினைக் காட்டி சோறு ஊட்டும் நடவடிக்கையாகவே ஏவுகணை கருதுகின்றது. 

 2013ஆம் ஆண்டில் ஹிண்ட்ராப் மற்றும் தேசிய முன்னணியும் ஏற்றுக் கொண்ட புரிந்துணர்வு  ஒப்பந்தத்தின் வழி (mdu-Blueprint) இந்தியர் களுக்கு 7% அரசாங்க வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறியது முதல் இவ்வாண்டு மலேசிய இந்தியர்களுக்கான செயல் வரைவு திட்டத்தினை  (MIB) அறிவிக்கும் வரை துளி யளவுகூட இந்தியர்களுக்கான  அரசாங்க வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை என்பதை யாராவது மறுக்க முடியுமா? மூன்றாவது முறையாக மறு வாக்குறுதியாக பட்ஜெட் வழி அறிவித்திருக்கும் நிலையில்  செயல் முறைகளைப் பற்றி தெளிவான நடைமுறைகளை ஏன் வழங்கவில்லை.

அரசாங்க வேலை  வாய்ப்புகள் இந்திய சமூகத்திடமிருந்து   முழுமையாக விடுபட்டுள்ளதற்கு  அரசாங்கத்தின்  நடைமுறைகளே காரணம் என்பதை ஏவு கணை அறிந்துள்ளது. அரசாங்க வேலை வாய்ப்புகளை  முழுமையாக நிர்ணயம் செய்யும் இயந்திரமாகச் செயல்படுவது பொது சேவை ஆணைய மாகும். (Suruhanjaya Perkhidmatan Awam - SPA) பொதுச் சேவைத் துறை ஆணை யத்தில்  பணியாற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு புதிய அதிகாரி களைத் தேர்வு செய்வதற்கான அதிகாரம் 100% வழங்கப்பட்டுள் ளது. பொதுச் சேவைத் துறை ஆணையத்தில் பணியாற்றும்  அதிகாரிகளின் விபரங்களை இன ரீதியிலாக ஆய்வு செய்தால் இனி 100 ஆண்டுகளானாலும் இந்தியர் களின் வேலை வாய்ப்புகளை 7 விழுகாட்டிற்குக் கொண்டு வருவது பகல் கனவாகவே மாறிவிடும் என்பது நிஜம்.

பட்டியல் 1 இன் வழி காணப்படும் அதிகாரிகளின் எண்ணிக்கையை ஆய்வு செய்தால் 98% அதிகாரிகள் பெரும்பான்மை இனத்தவர்களாகவே இருப்பதை உணர முடியும். பொதுச்சேவை ஆணையத்தின் வழியே அரசாங்க வேலை வாய்ப்புகளுகான தேர்வுகள் நடைபெறும் நிலையில் பிரதமரின்  7% வேலை வாய்ப்புகள் மலேசிய இந்தியர்களுக்குக் கானல் நீர் என்பதை காத்திருந்துதான் உணர வேண்டுமா? மலேசிய இந்தியர்களுக்கான அரசாங்க வேலை வாய்ப்புகள் 100% முடக்கப்பட்டுள்ளதாகவே அறிய வேண்டியுள்ளது.

மலேசிய பொதுச் சேவைத்துறை ஆணையத்தில் மட்டுமல்லாமல் அரசாங்க வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவல்ல மலேசியக் கல்வி ஆணையம் (Suruhanjaya Pendidikan Malaysia) மற்றும் பல ஆணையங்களிலும் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்புகளுக்குக் கதவடைக்கும் சூழலே ஏற்பட்டுள்ளதை நாளை ஆராய்வோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பிடிபிடிஎன் - சொக்சோவின் இணைய வேலை வாய்ப்பு சந்தை

4 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு! இணைய வேலை வாய்ப்பு சந்தையின்

மேலும்
img
லாபம் சம்பாதிக்க இது நேரமில்லை!

நாட்டை கோவிட் - 19 நச்சுயிரி நோய் உலுக்கி வரும் வேளையில், குறிப்பிட்ட சில

மேலும்
img
கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கானக் கேள்வி-பதில்

கேள்வி 1: கோவிட்-19 பரவலால் கடன் தொகைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி

மேலும்
img
சிகரெட் விற்பனையில் ஈடுபடும் உணவு விநியோகஸ்தரர்கள்

உணவு பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் விநியோகம் செய்பவர்கள் மீது முழு

மேலும்
img
மதுபானம் அருந்திய 9 பேர் கைது

நடமாட்ட கட்டுப்பாட்டு உத்தரவை மீறி இங்குள்ள ஆற்றோரத்தில் மது அருந்திக்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img