கோலாலம்பூர்,
பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட வரலாறு காணாத கனமழை, திடீர் வெள்ளத்திற்கு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுக்கடங்காத மேம்பாட்டுத் திட்டங்களே காரணம் என்று பலமான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள வேளையில் கண்மூடித்தனமான மேம்பாட்டுத்திட்டங்களுக்கு எவ்வாறு அனுமதி தரப்பட்டது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்றும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பினாங்கு மாநிலத்தில் ஒன்பது நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டு இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆண்டு2016 அக்டோபர் 14 ஆம் தேதி தஞ்சோங் பூங்காவில் ஜாலான் லெம்பா பெர்மாய் - புஞ்சாக் எர்ஷ்கின் சாலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தை தொடங்கி கடந்த சனிக்கிழமை எழுவர் பலியான திடீர் வெள்ளம் வரையில் சங்கிலித் தொடரைப்போன்று அடுக்கடுக்காக நிலச்சரிவு, திடீர்வெள்ளப் பேரிடர் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.
ஒவ்வொரு முறையும் இது போன்ற சம்பவம் நிகழும் போது பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் மண்ணின் தோழர் கழகமும் கடுமையான குற்றச்சாட்டு களை முன்வைத்த போது அவற்றை மாநில அரசாங்கம் மறுத்தே வந்துள்ளது. கடந்த 2016 நவம்பர் 7 ஆம் தேதி அதாவது தீபாவளி முடிந்து ஒரு வாரத்தில் தெலுக் பஹாங், ஜாலான் ஊஜோங்கில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தின் போது அப்பகுதிக்கு அருகில் உள்ள மலைச்சாரல் பகுதியில் மலைகள் வெட்டப்பட்டு மேற்கொள்ளப்பட்ட மேம்பாட்டுத்திட்டமே முக்கிய காரணம் என்று தங்களின் ஆய்வில் தெரியவந்துள்ளதாக பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகமட் இட்ரிஸ் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 8.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்