கோத்தா பாரு,
தலைநகரில் நடைபெறவிருந்த பீர் விழாவில் வெடிகுண்டு வீசுவதற்காக சுயமாக வெடி குண்டை தயாரித்த குற்றத்தை படிவம் 6 மாணவர் இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டார்.
இன்று நடைபெறவிருக்கும் எஸ்டிபிஎம் தேர்வில் அமரவிருக்கும் மாணவர் முகமட் ஹபிஸி மாட் யுசோப் தான் செய்த குற்றத்தை நீதிபதி அகமட் பாஸில் பாருடின் முன்னிலையில் ஒப்புக் கொண்டார். சம்பந்தப்பட்ட மாணவர் கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் தேதி கம்போங் மெர்காங்கிலுள்ள வீட்டில் இரு சுயமாக செய்யப்பட்ட வெடிகுண்டுகளை வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
இந்த சட்டவிரோத நடவடிக்கையில் அவர் 12 வயது முதல் ஈடுபட்டு வந்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்ச தண்டையாக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 6 பிரம்படிகளும் வழங்கப்படலாம். அடுத்த மாதம் 6ஆம் தேதி இவருக்கான தண்டனை வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper 6.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்