ஜார்ஜ்டவுன்,
சனிக்கிழமை தொடங்கி 15 மணி நேரத்திற்கும் மேல் தொடர்ந்து கொட்டித்தீர்த்த சூறாவளி மழையால் ஏற்பட்ட பயங்கர வெள்ளத்தில் பினாங்கு தீவு முற்றாக ஸ்தம்பித்துள்ளது. திடீர் வெள்ளத்தில் சிக்கி செய்வதறியாது மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கும் அதே சமயம், நொண்டிச் சாக்குகள் கூறுவதை மாநில அரசாங்கம் உடனே நிறுத்திக்கொண்டு, இந்நிலை மைக்கு தாங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று கண்டனக் குரல் எழுந்துள்ளது. பினாங்கின் வரலாற்றில் இதுவே படுமோசமான வெள்ளம் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாநிலத்தில் வடிகால் அமைப்பு சரியாக இல்லாததால் இத்தகைய பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மாநில அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
பினாங்கில் அளவுக்கதிமான மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், கடுமையான மழை, வெள்ளம் போன்ற பேரிடர் சூழலை சமாளிப்பதற்கு வடிகால் முறைகளை சீர்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க மேம்பாட்டாளர்கள் தவறியிருக்கின்றனர் என்று சமூக நல அமைப்புகள் சாடியுள்ளன.
அதிகரிக்கும் வெள்ள நீரை கட்டுப்படுத்துவதற்கு தோதாக மாநிலத்தின் வடிகால் முறைகள் அமையவில்லை. அதன் காரணமாகவே கால்வாய்களிலும், ஆறுகளிலும் நீர் பெருகி பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாய நிலை ஏற்பட்டது என்று மாநில ஊராட்சி மன்ற, போக்குவரத்து நிர்வாக, வெள்ள நிவாரணக் குழுவின் தலைவர் சோவ் கோன் இயோவ் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 6.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்