கோலாலம்பூர்,
பினாங்கு, பேரா, பெர்லிஸ், கெடா உட்பட தீபகற்ப மலேசியாவின் பல்வேறு மாநிலங்கள் மோசமான வானி லையால் பாதிக்கப்படும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.
அதே சமயம், சிலாங்கூரில் கிள்ளான், கோல சிலாங்கூர், கோலலங்காட், சபாக் பெர்ணம், சிப்பாங் ஆகிய மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் பெருக்கம் ஏற்படும் என்று சிலாங்கூர் மாநில தீய ணைப்பு, மீட்பு இலாகா கூறியுள்ளது. பினாங்கு, பேரா, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் எந்த நேரத்திலும் கடுமையான சூறாவளி காற்றுடன் கனத்த மழை பெய்யும் என்ற வானிலை இலாகாவின் எச்ச ரிக்கை நேற்று விடப்பட்டது.
கிளந்தான், திரெங்கானு மாநிலங்களிலும் கடுமையான காற்று மழை பெய்யும் என்று எச்சரிக் கப்பட்டுள்ளது. ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு என மூன்று வண்ணங்களில் இந்த எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. மஞ்சள் நிற எச்ச ரிக்கை, மக்களுக்கு உடனடி மிரட்டலை ஏற்படுத்தாத வானிலைச் சூழலை குறிக்கின்றது.
ஆரஞ்சு நிற எச்சரிக்கை, பாதிக்கப்பட்ட இடங்களில் மக்கள் மோசமான சூழலை எதிர்நோக்க தயாராக இருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது. சிவப்பு நிற எச்சரிக்கை,உடனே அபாய இடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
Read More: Malaysia Nanban News paper on 6.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்