ஷா ஆலம்,
சிலாங்கூர் மாநிலத் தில் உள்ள இந்தியர் களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படும் என்ற உறுதிமொழியுடன் வெ.312 கோடி மதிப் புள்ள 2018ஆம் ஆண் டுக்கான மாநில பட்ஜெட்டை அறிவித்த சிலாங் கூர் மந்திரிபுசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, இது முழுக்க முழுக்க மக்களுக்கான நல்வாழ்வு பட்ஜெட் என்று வர்ணித்தார். 2017 பட்ஜெட்டிற்காக ஒதுக் கப்பட்ட வெ.345 கோடி தொகை யுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் 10 விழுக்காடு குறைவாகும்.
இந்த தொகையில் வெ.166 கோடி மேம்பாட்டிற்காக ஒதுக்கப் பட்டிருக்கிறது. முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் இது ஒரு விழுக்காடு அதிகமாகும்.
3 மாத போனஸ்
வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்துவிட்ட நிலையில் 2018ஆம் ஆண்டு பல்வேறு சவால்கள் காத்திருக்கும் பட்சத் தில் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 2 மாத போனஸ் தொகை 3 மாதங்களாக அதிகரிக்கப்படுகிறது என்றார் அஸ்மின்.
மாநில மேம்பாட்டிற்கு கடுமையாக பாடுபட்டு வரும் மாநில அரசு ஊழியர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளையில் ஒன்று கூடும் வகையில் இந்த மூன்று மாத போனஸ் அறிவிக்கப்படுவதாக அவர் சொன்னார். இதன் வழி மாநிலத்தில் உள்ள கிட்டத்தட்ட 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் மூன்று மாத போனஸ் தொகையை பெறுவர்.
இந்த போனஸ் தொகையை 6,725 சமய ஆசிரியர்கள், 78 சீன புதிய கிராமத் தலைவர்கள், 48 இந்திய சமுதாயத் தலைவர்களும் பெறுவர்.
Read More: Malaysia nanban News paper on 4.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்