கோலாலம்பூர்,
சரவா ரிப்போர்ட் சஞ்சிகையின் ஆசிரியர், இவ்வார தொடக்கத்தில் இங்கிலாந்து நீதிமன்றத்தில் தனக்கெதிராக கொண்டு வந்த குற்றச்சாட்டு தொடர்பில் நாட்டின் முன்னணி வழக்கறிஞரும் ஒரு போராட்டவாதியுமான டத்தோ அம்பிகா ஸ்ரீநிவாசன் நேற்று மௌனம் கலைந்தார். பிரிட்டனில் தொடுக்கப் பட்டுள்ள, அப்துல் ஹாடி அவாங் மற்றும் அந்த சஞ்சிகையின் ஆசிரியர் கிளேர் ரெவ்கேஸ்டல் பிராவ்ன் ஆகியோருக்கு இடையிலான வழக்கில் குறிப்பாக இரண்டு இடங்களில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் இருப்பதால் இப்போதைக்கு நான் கருத்துரைக்க முடியாது என்று அம்பிகா கூறினார்.
இங்கிலாந்தில் இந்த வழக்கை முழுமையாக முன்னெடுத்திருப்பவர் ஹாடி அவாங் (பாஸ் கட்சியின் தலைவர்). அது முற்றிலும் அவருடைய உரிமை. ஆதலால், இதற்கான ஆவணங்கள், தகவல்கள் தேவை என்றால் இங்கிலாந்து நீதிமன்றத்தில்தான் அந்தக் கோரிக்கையைச் செய்ய வேண்டும். மிகவும் கடுமையான இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அங்குதான் எதையும் பேச முடியும். அங்குதான் இந்த விசாரணையும் நடைபெறவிருக்கிறது. இவை அனைத்தும் நடக்கவிருப்பது இங்கிலாந்தில், மலேசியாவில் அல்ல என்று அவர் கருத்துரைத்தார்.
ஆகவே, தற்காப்பு தரப்பு வழக்குப்பதிவேட்டில் இரு பத்திகளில் எனது பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை வைத்து, இந்த வழக்கை தொடுத்துள்ள ஹாடி அவாங் தரப்பிலும் அவருடன் தொடர்புடையவர்களும் மலேசியாவில் ஒரு குட்டி விசாரணையை நடத்துவதை ஏற்றுக்கொள்ளவும் முடியாது, அது முறையும் ஆகாது. அது மிகவும் அசாதாரணமான ஒரு விஷயமாகும் என்று அம்பிகா வர்ணித்தார்.
Read More: Malysia Nanban News Paper on 3.11.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்