கோலாலம்பூர்,
பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்த 2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை (பட்ஜெட்) நிராகரிப்பதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து தாங்கள் அனுபவித்து வரும் வேதனையை இந்த பட்ஜெட் போக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
மலேசியர்கள் வேதனையை அனுபவித்து வருவதை பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தேசிய முன்னணி யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக் கும் தாம் நினைவுறுத்துவதாக அவர் கூறினார்.
ஜெர்லூனில் விவசாயிகள், பாகான் டத்தோவில் மீனவர்கள், செம்பு ரோங்கில் குடியேற்றவாசிகள், பெக்கானில் சிறுதோட்டக்காரர்கள், தித்திவங்சாவில் தொழில்துறை தொழிலாளர்கள், புத்ராஜெயாவில் பொதுச்சேவை ஊழியர்கள் என பலர் டத்தோஸ்ரீ நஜீப் பிரதமராக பதவியேற்றதிலிருந்து வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.
நாட்டின் வரவு செலவு திட்ட வரலாற்றில் 2018ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மிக பெரிய நிதி ஒதுக்கீடுகள் கொண்ட பட்ஜெட்டாகும். ஆனால், மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டின் விகிதம் இதுவரையிலான பட்ஜெட்டுகளை காட்டிலும் மிக குறைவாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் 17 சதவிகிதம் மட்டுமே மேம்பாட்டிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
2012இல் 22.0 விழுக்காடாகவும் 2013இல் 19.8 விழுக்காடாகவும் 2014இல் 17.6 விழுக்காடாகவும் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. 2015 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு விகிதம் அதிகரிக்கப்பட்டாலும் 20 விழுக்காட்டிற்கு குறைவாகவே அது இருந்தது.
Read More: Malaysia Nanban News Paper on 31.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்