பெட்டாலிங்ஜெயா,
மலேசியாவிலிருந்து மணல், இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. மணல் ஏற்றுமதியை அனுமதிக்கும் ஏ.பி. பெர்மிட் இதுவரையில் யாருக்கும் அங்கீகரிக்கப்பட்டதாக பதிவுகள் இல்லை என்று இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனாய்டி துவாங்கு ஜப்பார் தெரிவித்தார். இங்குள்ள ஒருவரின் தில்லுமுல்லு வேலையாக கூட இது இருக்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மலேசியாவிலிருந்து மணல், முதல் கட்டமாக தமிழ்நாட்டை சென்றடைந்துள்ளது என்று டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை செய்தியை மேற்கோள்காட்டி வினவிய போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அந்த இந்திய பத்திரிகை செய்திப்படி, கடந்த வாரம் 55 டன் எடை கொண்ட மணல், தமிழகத்தில் புதுக்கோட்டையை தலமாக கொண்ட ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா இறக்குமதி செய்துள்ள அந்த மணலின் விலை ஒரு கனஅடிக்கு 60 ரூபாய் அதாவது 4 மலேசிய ரிங்கிட்டாகும்.தமிழ் நாட்டில் உள்ள ஆறுகளிலிருந்து எடுக்கப்படும் மணலின் விலை 110 ரூபாய் முதல் 120 ரூபாயாகும். மலேசியா மணல் அங்கு 50 விழுக்காடு மலிவாகும். மலேசியா, கம்போடியா போன்ற தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யும் மணல் இந்தியாவின் கட்டுமானத்துறையை மேலும் வலு சேர்க்கும் என்று சென்னையில் உள்ள தென் மாநிலங்களுக்கான இந்தியாவின் கட்டுமானத்துறை சங்கத்தின் செயலாளர் எஸ். ராமபிரபு தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அமைச்சர் ஜூனாய்டி, மலேசியாவில் தங்களுக்கு வழங்கப்பட்ட ஏ.பி. பெர்மிட்டை எந்தவொரு நிறுவனமும் தவறான முறையில் பயன்படுத்தியுள்ளதா என்பது குறித்து ஆராயப்படும் என்றார். அப்படி நடந்து இருக்குமானால் அவர்களுக்கான பெர்மிட் லைசென்ஸை பறிமுதல் செய்வது குறித்து பிரதமரிடம் தாம் பேசவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 30.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்