கிள்ளான்,
கிள்ளான் வட்டாரத்தில் சட்ட விரோதமாகக் குப்பைகளைக் கண்ட - கண்ட இடங்களில் கொட்டும் சம்பவத்தைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் அமலாக்கப் பிரிவுக்கு அனுப்பி உதவுபவர்களுக்கு சிறப்புச் சன்மானமாக 200 வெள்ளி வழங்கப்படும், என்று அக்கழகத் தின் தலைவர் டத்தோ முகமட் யாசிட் பிடின் தெரிவித்தார்.
மேற்பட்ட திட்டம் கடந்த ஆண் டிலிருந்து அமல்பட்டதிலிருந்து இதுவரை 89 லோரிகள் பிடிபட்ட வேளையில் அந்நடவடிக்கை களைப் புகைப்படம், வீடியோ எடுத்து சமர்ப்பித்தவர்களுக்கென குறைந்தது 18,000 வெள்ளித் தொகை சன்மானமாக வழங்குவதற்குச் செலவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பிடிபடும் ஒவ்வொரு லோரிகளுக்கும் குறைந்தது 1,300 வெள்ளியிலிருந்து 2,500 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் தொடர்பில், பிடிபட்டவர் களுக்கான அபராதத் தொகைக் கட்டணம் மட்டும் மொத்தம் 100,000 வெள்ளிக்கு மேல் வசூலானதாக அவர் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 27.10.207
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்