கோலாலம்பூர்,
நாட்டையே உலுக்கிய மிகப்பெரிய முதலீட்டு மோசடி திட்டமான பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டத்தில் பணம் போட்டு ஏமாந்த சுமார் 6,764 பேரின் நீதிமன்ற போராட்டத்திற்கு நாளை வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கப்படுகிறது. பெஸ்தினோ நிறுவனம் மிகவும் சாதுர்யமாக, இந்தியர்களை வைத்தே இந்தியர்களை வளைத்துப் போடும் திட்டத்தை அரங்கேற்றி, வெ.41 கோடியே 10 லட்சத்தை அதன் வசமாக்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா?
உங்கள் கையில் உள்ள பணம் உங்களுக்குச் சொந்த மானது. நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். அதை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. முதலீடு என்ற பெயரில் கையில் இருக்கும் பணத்தை இழந்து விட வேண்டாம் என்று மலேசிய மத்திய வங்கி (பேங்க் நெகாரா) வலியுறுத்துகிறது.
உங்கள் பணத்தை சுருட்டவே சிலர் காத்திருக்கின்றனர். நம் நாட்டில் சட்டவிரோத முதலீடுகள் சம்பந்தப்பட்ட மோசடிகளுக்கு கடந்த 19 மாதங்களில் 500,000-க்கும் மேலான வர்கள் பலியாகியுள்ளனர் என்று புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. புக்கிட் அமான் வர்த்தகக் குற்றவியல் புலன் விசாரணை இலாகாவின் துணைத்தலைவரான டத்தோ ஏ.தெய்வீகன் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி இத்தகவலை வெளியிட்டிருந்தார். அதிக லாபம் தருவதாகச் சொல்லி பல மோசடிக் கும்பல்கள் மக்களை ஏமாற்றி வருகின்றன.
Read More: Malaysia Nanban News Paper on 26.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்