கோலாலம்பூர்,
அண்மையில் தாம் குவாந்தானுக்கு சென்றபோது, மலேசியர்கள் யாரையும் அனுமதிக்காத மிகப் பெரிய தொழிற் பேட்டையை கண்டு அதிர்ச்சி யடைந்ததாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார். எட்டு அடி உயரத்தில் சிமெண்ட் மதில் சுவர், ஒன்பது கிலோ மீட்டர் நீளம் கட்டப்பட்டு அதற்குள் அந்த தொழிற்பேட்டை இருப்பதாக துன் டாக்டர் மகாதீர் குறிப்பிட்டார். அந்த சிமெண்ட் மதில் சுவரில் ஐந்து கடைகள் நீளம் கொண்ட ராட்சத விளம்பரப் பலகை உள்ளது.
அந்த விளம்பரப் பலகையில் ஆங்கில எழுத்தும், அந்நிய மொழியும் மட்டுமே உள்ளது. நம் நாட்டில் இருக்கக் கூடிய ஒரு தொழிற் பேட்டையில் தேசிய மொழிக்கு இடமில்லை.இத்தகைய அற்பமான விஷயத்தை தேசிய மொழி காப்பகமாக இருக்கும் டேவான் பகாசா டான் புஸ்தாகாவினால் எப்படி ஏற்றுக் கொள்ள முடிகிறது என்பது தெரியவில்லை.
அந்த ராட்சத தொழிற்பேட்டை சுமார் மூவாயிரம் ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ளது. இதில் ஒரு மலைப் பகுதி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. மதில் சுவ ரால் மறைக்கப்பட்டு இருக்கும் அந்த தொழிற் பேட்டைக்குள் நிறைய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Read More: Malaysia Nanban News Paper on 26.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்