(எம்.கே.வள்ளுவன்)
கோத்தா திங்கி,
தன் மகளுடன் தகாத உறவு கொண்டிருந்த குற்றத்திற்காக ஆடவருக்கு கோத்தா திங்கி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று 81 ஆண்டு சிறை வாசத்தை அனுபவிக்க உத்தர விடப்பட்டது.
அத்துடன் 8 பிரம்படிகள் வழங்கும்படியும் செஷன்ஸ் நீதிபதி சஹிலா முகமட் யூசோப் உத்தரவிட்டார்.முன்னதாக 50 வயதுடைய அந்த லோரி உதவியாளர் மீது தகாத உறவு, பாலியல் உறவு போன்ற ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.கடந்த 2011ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி கோத்தா திங்கி தாமான் ஸ்ரீ சௌஜானாவில் அப்போது 11 வயதாக இருந்த தன் இரண்டாவது மகளிடம் காமச்சேட்டை புரிந்ததாக அந்த ஆடவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
2012 மார்ச் மாதம் பிற்பகல் 2.00 மணியளவில் தாமான் ஸ்ரீ சௌஜானாவிலுள்ள வீட்டிலும் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நள்ளிரவு 12.00 மணியளவில் கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 3லுள்ள வீடொன்றிலும் மேலும் இரு காமச்சேட்டைகளை அந்த ஆடவர் புரிந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.2014 அக்டோபர் மாதத்தில் மாலை 5.00 மணிக்கும் 2015ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கும் கோத்தா திங்கி பெல்டா ஆயர் தாவார் 3லுள்ள வீடொன்றில் தன் இரண் டாவது மகளிடம் காமச்சேட்டைகள் புரிந்ததன் தொடர்பில் மேலும் இரு குற்றச்சாட்டுகளும் அந்த ஆடவர் மீது கொண்டு வரப்பட்டது.
Read More: Malaysia Nanban Newspaper on 25.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்