காஜாங்,
நிலத்திற்கான உறுதிக் கடிதம் வழங்காத வரை எங்களது குடியிருப்புப் பகுதியிலிருந்து ஒரு போதும் வெளியேற மாட்டோம் என சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழி யர்கள் குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த 6 இந்திய குடும்பங்கள் தெரிவித்தன.
இம்மாத தொடக்கத்தில் அந்த குடியிருப்புப் பகுதி யிலுள்ள வீடுகளை உடைக்க வந்த காஜாங் நகராண்மைக் கழக அதிகாரிகள் இம்மாதம் 22ஆம் தேதி வரையில் காலக்கெடுவை வழங்கி விட்டு சென்றனர். இந்நிலையில், இந்த காலக்கெடு முடிவுற்றதைத் தொடர்ந்து தாங்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதாக சுங்கை ஜெலுக் முன்னாள் மருத்துவமனை ஊழியர்கள், குடியிருப்பாளர்கள் நடவடிக்கைக்குழு தலைவர் ஒத்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.
சிலாங்கூர் அரசாங்கமும் உலுலங்காட் மாவட்ட நில இலாகாவும் மாற்று நிலமாக 6 லோட்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளன. ஆனால், அதற்கான உறுதிக் கடிதத்தை வழங்கவில்லை. நாங்கள் இங்கிருந்து வெளியேறிய பிறகு நிலம் வழங்கப்படாவிட்டால் நாங்கள் என்ன செய்வோம் என அவர் கேள்வியெழுப்பினார்.
Read More: Malaysia Nanban News Paper on 24.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்