ஜார்ஜ்டவுன்,
நிலச்சரிவு பேரிடரால் பாதிக்கப்பட்ட தஞ்சோங் பூங்கா வீடமைப்புத் திட்டத்திற்கு இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சு அனுமதி வழங்க மறுத்திருந்தும் அத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது குறித்து தஞ்சோங் பூங்கா குடியிருப்பாளர்கள் சங்கம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது.கடந்த சனிக்கிழமை நிகழ்ந்த அப்பேரி டரில் ஒரு மலேசியரும் 10 அந்நியத் தொழிலாளர் களும் உயிரிழந்தனர்.
சுற்றுச்சூழல் அமைச்சு இத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், நகராண்மைக் கழகமும் மாநில அரசாங்கமும் இதற்கு இணக்கம் தெரி வித்து, இவ்வீடமைப்புத் திட்டம் மேற்கொள்ளப்படுவதற்கு அனுமதியும் வழங்கியதேன் என்று அச்சங்கத்தின் தலைவர் ஆர்.மீனாட்சி கேள்வி எழுப்பி யுள்ளார். மாநிலத்தில் உள்ள மக்களின் நலனை விட அந்த மேம்பாட்டாளரின் குரல் ஓங்கியிருக்கிறது என்பதே இதன் அர்த்தமாகும். சட்டத்தை மீறுவது அவ்வளவு சாதாரண விஷயமா என்பது அச்சமளிக்கும் ஒன்றாகும் என்று அவர் கருத்துரைத்தார்.
2007 - 2020 பினாங்கு மாநில கட்டமைப்பு திட்டத்தின் கீழ், தஞ்சோங் பூங்கா ஓர் இரண்டாம் நிலை வளர்ச்சிப் பகுதியாக கெஜெட்டில் பதிவாகியுள்ளது. அது மட்டுமின்றி, ஓர் ஏக்கர் நிலத்தில் 15 வீடுகளை மட்டுமே நிர்மாணிக்க அது அனுமதிக்கின்றது.
Read More: Malaysia Nanban News Paper on 24.0.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்