கோலாலம்பூர், செப். 17- சயாம் மரண ரயில் கட்டுமானத்தில் மரணமடைந்த இந்தியர்களுக்காக நினைவிடம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அப்துல் அஜிஸ் நேற்று கூறினார். இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைக்காக ஜப்பான் அரசாங்கம் கடந்த 1942ஆம் ஆண்டு சயாம் - பர்மா மரண ரயில் தண்டவாள கட்டுமானத் திட்டத்தை தொடங்கியது. 13 மாதங்களில் நிறைவுப்பெற வேண்டிய இத்திட்டத்திற்கு அதிகமான போர்க் கைதிகளை ஜப்பான் அரசாங்கம் பயன்படுத்தியது என்று கூறப்படுகிறது. ஆனால் ஆசிய மண்டலத்தைச் சேர்ந்த 2 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கட்டாயப்படுத்தி இந்த தண்டவாளத் திட்டத்திற்காக ஜப்பான் அரசு கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக மலாயாவில் இருந்து இந்தியர்கள், மலாய்க்காரர்கள், சீனர்கள் என பல சமூக மக்களை கட்டாயப்படுத்தி தண்டவாள பணிக்காக இழுத்து செல்லப்பட்டுள்ளனர். சயாம் மரண தண்டவாள கட்டுமானத்தின் போது மக்கள் பல துன்பங்களை எதிர்நோக்கியுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் மடிந்துள்ளனர். இவை அனைத்தும் நமது முன்னோர்கள் சொன்ன கதைகளில் இருந்து இன்றைய தலைமுறைக்கு தெரியவந்தாலும், இந்த கறுப்பு அத்தியாயம் பழஞ்சுவடி காப்பகத்தில் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் டிரிக் எனப்படும் மரண ரயில் ஆர்வலர் குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டிரிக்கின் இம்முயற்சிகளுக்கு சுற்றுலாத்துறை அமைச்சும், அதன் கீழ் இயங்கும் பழஞ்சுவடி காப்பகமும் முழு ஒத்துழைப்பு தரும் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி கூறினார். சயாம் மரண தண்டவாள கட்டுமானத்தின் போது மரணமடைந்த இந்தியர்கள் உட்பட ஆசிய மக்களுக்கான நினைவிடம் கட்டுவது குறித்து டிரிக்கின் தலைவர் சந்திரசேகரன் என்னிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவர்களுக்கான நினைவிடம் கட்டப்படுவது வரவேற்கக்கூடிய விஷயமாகும். இவ்விவகாரம் குறித்து சுற்றுலாத்துறை அமைச்சு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும். தாய்லாந்தில் உள்ள அரசியல் தலைவர்களிடம் இவ்விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று நஸ்ரி கூறினார். சயாம் மரண தண்டவாள கட்டுமானத்தின் கறுப்பு அத்தியாயங்கள் அனைத்தும் நமது வருங்கால தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக இந்த வரலாற்றுச் சான்றுகள் அனைத்தும் தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட வேண்டும். முடிந்தால் அச்சமயத்தில் பயன்படுத்தப்பட்ட சரித்திரப் பொருட்கள் அனைத்தும் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட பொருட்களை டிரிக் கண்டறிந்தால் உடனடியாக அதை அருங்காட்சியகத்தில் வைப்பதற்கான நடவடிக்கைகளை சுற்றுலாத்துறை அமைச்சு மேற்கொள்ளும் என்று டத்தோஸ்ரீ நஸ்ரி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்