முன்னாள் அமைச்சரும் பார்ட்டி வாரிசான் சபா கட்சியின் (வாரிசான்) தலைவருமான டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் கைது செய்யப்பட்டதன் நோக்கமே அக் கட்சியை முடக்கிப் போடுவதுதான் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார். வாரிசான் கட்சியை முடக்கிப் போடவும், அவரின் ஆதரவாளர்களை பயமுறுத்தவும்தான் ஷாபி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று துன் மகாதீர் தனது வலைப்பதிவில் கூறியி ருந்தார்.
முன்னாள் புறநகர் மற்றும் வட்டார மேம்பாட்டுத்துறை அமைச்சருமான ஷாபியை நேற்று முன்தினம் இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது. விசாரணைக்காக அவரை அழைத்து சென்றது. அவர் சபா மாநில ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நான்கு மணி நேரம் விசாரிக்கப்பட்டார். விசாரணையின் முடிவில் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக, செம்பூர்னா நாடாளுமன்ற உறுப்பினரான ஷாபி கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நேராக எம்ஏசிசி அலு வலகத்திற்கு அவரின் வழக்குரைஞருடன் சென்றார்.
Read More: Malaysia Nanban Nes Paper on 21.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்