மலேசியாவிற்கு ஜி.எஸ்.டி. எனப்படும் பொருள் சேவை வரி தேவையில்லை. மக்களுக்கு பெரும் சுமையைக் கொடுத்து வரும் அந்த வரி நாட்டின் வரு மானத்திற்கு பாதிப்பை கொண்டுவராமல் அதனை அகற்றலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பரிந்துரை செய்துள்ளார்.
தேவையற்ற உதவிகளை வழங்கி மக்கள் பணத்தை தவறாகப் பயன்படுத்தும் நோக்கத்திலேயே டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலைமையிலான அரசாங்கம் இந்த ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்தியது. இதில் பிரிம் எனப்படும் ஒரே மலேசியா மக்கள் உதவித் தொகை, மீனவர்களுக்கான 300 வெள்ளி அலவன்ஸ், கிராம பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக் குழுவின் தலைவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் 800 வெள்ளி அலவன்ஸ், அன்றாட
செலவு உட்பட தகுதி பெறாதவர்களுக்கு பல்வேறு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குவதும் இதில் அடங்கும் என்றார். நஜீப் தலைமையிலான அர சாங்கத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு புகழ்மாலை சூட்டிக் கொள்வதற்காக அதிகமான அரசாங்கப் பணத்தை செலவு செய்வதாலே அவர் தலை மையிலான தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது என்றும் அவர் சொன்னார்.
அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தியது, அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை 16 லட்சமாக உயர்த்தியது, பெமாண்டு உட்பட பல்வேறு அரசாங்க துணை நிறுவனங்களை அமைத்தது போன்ற அவரின் செயல்கள் நாட்டின் நிதி வளத்தை மேலும் மோசமாக்கியுள்ளது என்றார்.
Read More: Malysia Nanban News Paper on 21.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்