போதைப் பொருள் விநியோக நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் 33 வயது நபரை போலீசார் கைது செய் தனர். கடந்த வாரம் திங்கட்கிழமை ஜாலான் 5 பிரதான சாலையில்அதிகாலை 5 மணியளவில் போலீசார் நடத்திய சோதனையில் இவ்வாடவர் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப்துல்ரஹ்மான் இஸ்மாயில் தெரிவித்தார். இச்சோதனை நடவடிக்கையின் போது சம்பந்தப்பட்ட ஆடவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் குறிப்பிட்டார். அண்டை நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் அத்துப்பாக்கி 1,300 வெள்ளிக்கு வாங்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. எனினும் அத்துப்பாக்கியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது. அதே சமயம் அந்நபர் பயன்படுத்திய சத்ரியா ரக கார் மற்றொரு கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே கைது செய்யப்பட்ட அந்நபர் மீது 6 குற்றப்பதிவு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் ஒரு வாரத்திற்கு போலீஸ் தடுப்புக் காவலில் இருப்பதற்கு அனுமதி பெறப்பட்டதாகவும் டத்தோ அப்துல் ரஹ்மான் இஸ்மாயில் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்