தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ், ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தகர் சங்கம் இணை ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி கர்னிவல் நிகழ்வில் சேலை அழகு ராணி போட்டி நடை பெற்றது.
இப்போட்டியில் இறுதி சுற்றுக்கு தேர்வான ஏழு போட்டியாளர்களில் முதல் பரிசை தனியார் மருத்துவமனை ஒன்றின் தாதியான குமாரி ஹேமதர்ஷினி வெற்றி பெற்றார். இப்போட்டியில் இரண்டாவதாக லக்ஷினியும், மூன்றா வதாக புவனாவும் தேர்வு பெற்றனர். கடந்த 26 ஆண்டுகாலமாக ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தில் தீபாவளி விற்பனை சந்தை, தீபாவளி கலை பண்பாட்டு விழா நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் தீபாவளி சேலை அழகு ராணி போட்டி முக்கிய அங்கமாக நடைபெறும். இந்த ஆண்டு மலர் மணப் பெண் அலங்கார நிறுவனத்தின் இயக்குநர் மாயா மலர் ஒருங்கிணைப்பாளராக இருந்து இந்நிகழ்வை சிறப்பாக வழி நடத்தினார்.
வெற்றி பெற்றவர்களுக்கு ஈப்போ லிட்டில் இந்தியா வர்த்தக சங்கத்தின் தலைவி திருமதி கலா பாலசுப்பி ரமணியம் புவான் ஸ்ரீ ராதா ராஜூ பரிசுகளை எடுத்து வழங்கினார். ஈப்போ பாராட் மகளிர் தலைவி லட்சுமியும் கலந்து கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்