வரும் 14-ஆவது பொதுத்தேர்தலில் புத்ராஜெயாவை தேசிய முன்னணி தக்கவைத்துக்கொள்ள இயலாமல் போகலாம். சொற்ப பெரும்பான்மையைப் பெறுவதற்கு தேவைப்படும் மொத்த எண்ணிக்கையில் அக்கூட்டணிக்கு இன்னும் போதுமான பாது காப்பான தொகுதிகள் கைவசம் இல்லை என்பதே இதற்கு காரணமாகும் என்று அரசியல் விஞ்ஞானி ஒருவர் எச்சரித்துள்ளார். தேர்தல்களில் தேசிய முன்னணி தொடர் வெற்றிகளை குவித்திருந்தாலும், நடப்பில் உள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் 100 தொகுதிகளை மட்டுமே தேசிய முன்னணிக்கு பாதுகாப்பான தொகுதிகள் என்று குறிப்பிட முடியும் என்று மலேசிய அனைத்துலக இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் மார்சுக்கி முகமட் கருத்துரைத்தார்.
எஞ்சியுள்ள தொகுதிகளையும் பாதுகாப்பானவையாக மாற்றுவதற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் உறுதியான நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய, இப்போது பொதுத்தேர்தலை நடத்துவது அவருக்கு சற்று ஆபத்தானது என்று அவர் மேலும் கூறினார். ஓர் ஆய்வில் அவர் இத்தகவலை வெளி யிட்டுள்ளார்.
உண்மை நிலவரத்தின் அடிப்படையில் பார்த்தால், தீபகற்பத்தில் உள்ள 165 நாடாளுமன்றத் தொகுதிகளில் 57-ஐ மட்டுமே அம்னோ நிச்சயமாக வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ளது. அத்தொகுதிகளில், 70 இடங்கள் 70 விழுக்காட்டிற்கும் மேலான மலாய் வாக்காளர்களை கொண்டுள்ள மலாய் பெரும்பான்மை தொகுதிகள் என்றாலும் தேசிய முன்னணியை பொறுத்த வரையில் இதுதான் உண்மை நிலை.
Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்