மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ சுல்கிப்ளி அஹ்மட் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும், ஒரு திருமணமான பெண்ணுடனான அவரின் கள்ளத் தொடர்பு குறித்த புல னாய்வுகளை கண்காணிக்கும் பொருட்டு சட்டத்துறை தலைவர் அலுவலகம் சிறப்பு பணிப்படையை உரு வாக்கியுள்ளது.
சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி அலி நேற்று இதனைத் தெரிவித்தார். அக்கள்ள உறவு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக சுல்கிப்ளி விசாரிக்கப்பட்டு வருகிறார் என்று போலீசார் இவ்வார தொடக்கத்தில் கூறியிருந்தனர்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் முக்கியப் புள்ளியான அவர் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்த ளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு மிகவும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அவர் மீதான விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
சுல்கிப்ளிக்கு எதிரான இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்தும் பத்திரிகையாளர்களிடமி ருந்தும் ஏராளமான கேள்விகள் தனக்கு கிடைத்திருப்பதாகவும் இதன் எவ்வளவு கடுமையானது என்பதை கவ னத்தில் கொண்டு, இது தொடர்பான விசாரணையை தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டு கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி பணிப்படையை தாங்கள் அமைத்திருப்பதாகவும் அபாண்டி தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்