கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் நேற்றிரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்.ஏ.சி.சி.) கைது செய்யப்பட்டார். அவர், சபா வாரிசான் கட்சியின் தலைவருமாவார்.
கிராமப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட வெ.150 கோடி கையாடப்பட்டதன் விசாரணை தொடர்பாக நேற்றிரவு 9 மணிக்கு அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்பு, சுமார் ஐந்து மணி நேரம் இங்குள்ள எம்.ஏ.சி.சி. அலுவலகத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று வெள்ளிக்கிழமை காலையில் கோத்தா கினபாலு உயர் நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்டு, பிறகு அவர் தடுத்து வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸ்மி பாக்கி இத்தகவலை உறுதி செய்துள்ளார்.
இதற்கு முன்பு, ஷாபி அப்டால் தனது வழக்கறிஞர்களுடன் நேற்று மாலை 5.15 மணிக்கு எம்.ஏ.சி.சி. அலுவலகம் வந்தடைந்தார். ஷாபியின் மனைவி டத்தின்ஸ்ரீ ஷுர்யானி ஷுவாய்ப், இவ்விசாரணை தொடர்பாக கைதான முதல் நபரான வாரிசான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ பீட்டர் அந்தோணி ஆகியோர் உடனிருந்தனர்.
Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்