மலேசியாவின் 60 ஆண்டுகால சுதந்திரத்திற்குப் பின்னரும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுகளுக்குத் தீர்வு காணப்ப டவில்லை என்பதை யாருமே நிரூபிக்க வேண்டியதில்லை. மலேசிய இந்தியர்களின் நீண்ட கால (சமூகப் பொருளா தார பின்னடைவுகளின் விளை வாக இளைய தலைமுறையினரை குண்டரிய நடவடிக்கைகளுக்கு பலிகொடுத்து வருகின்றோம் என்பது உள்ளங்கை கைப்புண்ணாகும்.
கல்வியில் பின் தங்கியுள்ள இந்திய மாணவர்களுக்கும், பள்ளியை விட்டு விலகிவிடும் சமூகப் பொருளாதார இன்னல்களால்) இளைஞர்களுக்கும் பரிகார நடவடிக்கைகளை ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்டதால் மேன்மேலும் பாதிக்கப்பட்ட சமூகமாக, உருவாகி வருகின்றோம் என்ற உண்மையை ஏவுகணை வலியுறுத்த விரும்புகின்றது.
மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு ஆக்கப்பூர்வமான ஒருங்கிணைந்த வியூக நடவடிக்கைகள் இன்றுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதைப் பற்றி யாருமே அக்கறை கொள்ளவும் இல்லை என்பதே உண்மையாகும். 60 ஆண்டுகளுக்குப் பின்னரும் மலே சிய இந்தியர்களிடையே, புரையோடிப் போயிருக்கும் அடையாள ஆவண பிரச்சினைகளுக்குக் கூட தீர்வினைக் காணாமல் அரசியல் கண்ணாம்பூச்சி ஆடிவரும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கூட கேட்க நாதியற்றவர்களாய் நமது அரசியல் பிரதிநிதித்துவம் பலவீனமாகிப் போயிருப்பதைக் காண ஏவுகணைக்கு வேதனையே மிஞ்சுகின்றது.
Read More: Malaysia Nanban News Paper on 20.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்