சமயம் என்ற பெயரில் நடைமுறைக்கு ஒவ்வாத சில தடை செய்யப்பட்ட பழக்க வழக்கங்களை ஜொகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் வன்மையாகக் கண்டித்துள்ளார். இம்மாதிரியான சூழலில் ஒரு சமூகத்தில் வாழ்வது சிரமமாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தூய்மை என்ற அடிப்படையில் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்ற மறுத்த முஸ்லிம்களுக்கு மட்டுமான சலவை நிலையத்தின் நிலைப்பாடு குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு பேசினார்.
உங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள். பொது இடங்களில் உள்ள இருக்கைகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவற்றை நாய்கள் தீண்டியிருக்கலாம். அல்லது ஹோட்டல்களில் உள்ள தலையணைகளும், போர்வைகளும் அசுத்தமானவையாக இருக்கலாம்.
இதற்கு முடிவே கிடையாது. அனைத்திற்கும் தடை விதித்தால், ஒரு சமுதாயத்தில் வாழ்வதை விட குகையில் தனியாக வாழ்வதுதான் சிறப்பு என்பதே எனது ஆலோசனை என்று சுல்தான் இப்ராஹிம் மேலும் கூறினார். பத்து பகாட்டில் மலேசிய துன் ஹுசேன் ஓன் பல்கலைக்கழகத்தின் 17-ஆவது பட்ட மளிப்பு விழாவில் உரை நிகழ்த்தியபோது சுல்தான் அவர் இவ்வாறு பேசினார்.
Read More: Malaysia Nanban News Paper on 16.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்