நேற்று அதிகாலை மணி 1.40 அளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உலுசிலாங்கூர் மாவட்ட காவல் துறையினர், சுங்கை சோ, கம்போங் டிராடிசியில் சந்தேகத்திற்குரிய வகையில் இரு மோட்டார் சைக்கிள்களில் சுற்றிக் கொண்டிருந்த 3 இளைஞர்களைக் கைது செய்தனர்.
அக்கம்பத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த தகவலைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறை ரோந்து பிரிவினர் பதினைந்துக்கும் இருபது வயதுக்கும் இடைப்பட்ட 3 இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் வைத்திருந்த பைகளை சோதனையிட்டதில் சிறு கத்தி, பிளையர், திருகு மற்றும் வெட்டும் ஆயுதங்களைக் கைப்பற்றினர். அவர்கள் மூவரும் வீடு புகுந்து திருடுதல் மற்றும் மோட்டார் சைக்கிள் பாகங்கள் திருடுதல் போன்ற குற்றங்களுக்காக விசாரணைக்கு உதவ தடுத்து வைக்கப் பட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்