இந்தோனேசியாவில் அண்மையில் மலேசிய கடப்பிதழுடன் கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கை பிரஜைகள் குறித்து மேலும் தகவல்களை பெறுவதற்கு அங்குள்ள குடிநுழைவு துறையுடன் மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் தொடர்பு கொண்டுவருகின்றனர். இந்தோனேசியா வழியாக ஐரோப்பாவிற்கு செல்ல விரும்புவோருக்கு உண்மையான மலேசிய கடப்பிதழ்களை அக்கும்பல் விற்பனை செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டிருப்பதாக மலேசிய குடி நுழைவு துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி கூறினார்.
மலேசிய கடப்பிதழ்களை பயன்படுத்திய ஐந்து இலங்கை பிரஜைகளை இந்தோனேசிய குடிநுழைவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என வெளியாகி யுள்ள தகவல் குறித்து தாங்கள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் சொன்னார்.அந்த ஐந்து இலங்கை பிரஜைகளும் ஜாகர்த்தாவில் உள்ள சுகார்னோ-ஹட்டா அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை இந்தோனேசிய நாளேடு ஒன்று கூறியிருந்தது.
Read More: Malaysia Nanban News Paper on 13.10.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்